K-Drama புகழ் நடிகை கிம் சே ரான் உயிரிழப்பு.. வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தென்கொரிய நடிகை!
சியோல்: கொரியா சிரியல்களில், அதாவது கே டிராமாக்களில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை கிம் சே ரான். 24 வயதான இவர், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார். இதற்கிடையே திடீரென இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்திவரும் சூழலில், இது அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நடிகை கிம் சே ரான்.. இவர் 'லிசன் டு மை ஹார்ட்', 'தி குயின்ஸ் கிளாஸ்ரூம்,' மற்றும் 'ஹாய்! ஸ்கூல்-லவ் ஆன்' என பல கொரிய சீரியல்களில் நடித்துப் புகழ் பெற்றவர். மேலும், பல்வேறு படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

என்ன நடந்தது?
அவர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி தனது வீட்டில் இறந்து நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு வயது 24. அங்கு பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த கிம் சே ரான் திடீரென உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்றைய தினம் கிம் சே ரானை சந்திக்க அவரது நண்பர் சென்றுள்ளார். வீட்டில் கிம் சே ரான் உடலைப் பார்த்துப் பயந்துவிட்டார். அவரை எழுப்ப முயன்ற போதிலும், எந்தவொரு ரெஸ்பான்ஸும் இல்லை. இதையடுத்து அவரது நண்பர் தான் போலீசாருக்கு கால் செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவர்கள், அவரை சோதித்துள்ளனர். கிம் சே ரான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இடத்தையும் முழுமையாகச் சோதித்துள்ளனர். அதில் யாரும் அத்துமீறி வீட்டில் நுழைந்தது போல அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
மரணத்திற்கு என்ன காரணம்
அதேநேரம் மரணத்திற்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை. இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கிம் சே ரானின் திடீர் மரணம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது நண்பர்களும் உறவினர்களும் கிம் சே ரான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிம் சே ரான் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி பிறந்தவர். அவர் தனது ஒன்பது வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டார்.. 'எ பிராண்ட் நியூ லைஃப்' (2009) மற்றும் 'தி மேன் ஃப்ரம் நோவேர்' (2010) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே கலக்கி இருப்பார். தொடர்ந்து 'எ கேர்ள் அட் மை டோர்' (2014) மற்றும் டிவி சீரியஸான 'சீக்ரெட் ஹீலர்' (2016) என இவர் நடித்த பல பிராஜக்ட்கள் வெற்றி பெற்றுள்ளன.
பல்வேறு சவால்கள்
முதலில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியடைந்த போதிலும், சமீப காலமாக அவர் சினிமாவிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி சவால்களைச் சந்தித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் அவர் தென்கொரியத் தலைநகரான சியோலில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அவரது நற்பெயரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.
இந்தச் சம்பவத்தால் அவரது பெயர் டேமேஜ் ஆனது. மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த சூழலில், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். மேலும், நடிப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
பொருளாதார நெருக்கடி
இதனால் அவர் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியைச் சந்தித்தார். பார்ட் டைம் வேலை செய்தே அவர் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தது. சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்கவும் முயன்றார். இருப்பினும், உடல்நல பிரச்சினைகளால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications