Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதவியா.. பணத் திமிரா.. எந்த கணக்கில் இதை சேர்ப்பது.. மண்டைதான் காயுது.. நீ்ங்களே பாருங்க!

லட்சக்கணக்கான பணத்தை ஒரு பெண் வீதியில் வீசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தென்கொரியா: நம்ம ஊர்ல ஏழைகளுக்கு ஒரு சிறுதொகையை கொடுத்துட்டு கூடவே அதை பப்ளிசிட்டி செய்துக்க ஒரு போட்டோவும் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு பெண் ஏழைகளுக்கு பணம் கொடுக்க முடிவெடுத்தார். இது என்னவோ நல்ல விஷயம்தான். ஆனால் அவர் கொடுத்த விதத்தை பார்த்தால் அது உதவி செய்வது போல தெரியவில்லை. பணத்திமிரா என்றும் புரியவில்லை. எந்த தினுசில் இதை சேர்த்து கொள்வது என்றே தெரியாமல் மண்டைதான் காயுது.

தென்கொரியாவில் உள்ளது டேகு என்ற பகுதி. இங்கு ஒரு பெண் ஒருவருக்கு ஏழைகளின் மீது அதிக பாசமும், பரிவும் ஏற்பட்டுவிட்டது. ஏழைகளை பார்த்தாலே பாவமாக இருக்கிறதே, அவர்களை உதவ வேண்டும் என்று அந்த பெண் நினைத்தார். அதற்காக தன்னிடம் உள்ள விலை உயர்ந்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கூடவே கட்டுக்கட்டுக்கா பணத்தையும் அள்ளி கையில் வைத்துக் கொண்டார்.

South Korean woman throws away cash worth millions on road

நகரின் பல இடங்களுக்கு காரில் சென்றுக்கொண்டே பணத்தை ரோட்டில் வீச ஆரம்பித்தார். இதுபோல ஒரு இடத்தில் இல்லை. நகரின் 11 இடங்களில் இப்படி பணத்தை வாரி வாரி இறைத்தார். கிட்டத்தட்ட நம்ம ஊர் கணக்குப்படி 9 லட்சம் ரூபாய் இருக்கும். இப்படி போட்டால் ஏழைகள் ஓடி வந்து எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்து இவ்வாறு செய்துள்ளார்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? ஒருவரும் அந்த பணத்தை கண்டுக்கொள்ளவே இல்லை. அந்த பணத்தை பார்த்தும், காலடியில் கிடந்த பணத்தை தாண்டியும் மக்கள் சென்று கொண்டிருந்தனர். ஒருவரும் அந்த பணத்தை சீந்தவேயில்லை. இப்படி பணம் முழுவதும் ரோட்டில் கிடப்பதையும் காற்றில் பறந்து கிடப்பதையும் கண்ட சிலர், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசாரும் அந்த பணத்தை தேடி தேடி கண்டெடுத்தனர். முழு பணத்தையும் எடுக்கமுடியவில்லை. சேகரித்து வைத்த அந்த சம்பந்தப்பட்டவர்கள் வந்து கேட்டால் விசாரித்து கொடுத்துவிடலாம் முடிவெடுத்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த வீடியோ பதிவாகியுள்ளது. அது தற்போது வைரலாகியும் வருகிறது.அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். அந்தக் கதையாக இருக்கிறது இந்த அம்மணியின் அடேங்கப்பா செயல்பாடு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+