தென்சூடானில் ரஷ்யா தயாரிப்பு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து - 40 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஜூபா: தென்சூடானின் தலைநகர் ஜூபா விமான நிலையத்தில் ரஷ்யா தயாரிப்பு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி 40 பேர் பலியாகி உள்ளனர்.

எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற பயணிகள் விமானம் அண்மையில் ஷினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கி 224 பேர் பலியாகினர். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு ரஷ்யா தயாரிப்பு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

South Sudan plane crash kills 40 near Juba airport

தென் சூடான் தலைநகர் ஜூபா விமான நிலையமானது வெள்ளை நைல் நதி கரையில் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று ஒரு விமானம் புறப்பட்டது.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 800 அடி உயரம் பறந்த நிலையில் அது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இது பலோச் என்ற மற்றொரு நைல் நதி கரை நகரத்துக்கு சென்ற கார்கோ விமானம் எனவும் கூறப்படுகிறது. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+