Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராக்கெட்டில் ஏவப்பட்ட 1 கோடி ரூபாய் கார்.. ஏலியனுக்கு மெசேஜ்.. லைவ் கவரேஜ்.. அசத்தும் ஃபல்கான் ஹெவி

உலகின் மிகப்பெரிய ராக்கெட் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செவ்வாயை கிரகத்தை சுற்றப்போகும் 1 கோடி ரூபாய் கார்..வீடியோ

    நியூயார்க்: கடந்த 2016 தொடக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு உலகின் பெரிய ராக்கெட்டை ஏவப்போகிறேன் என்று குறிப்பிட்டார். அப்போது உலகமே சிரித்தது.

    ஆம் இவர் அனுப்பிய தொடக்க கால ராக்கெட்டுகள் எல்லாம் 33 நொடிகள் கூட தாங்காமல் வெடித்துச் சிதறிய ராக்கெட்டுகள். சில ராக்கெட் மட்டும்தான் விண்ணில் சரியாக சென்று இருக்கிறது.

    ஆனால் இவர் சொன்னார் நான் ராக்கெட் மட்டும் அனுப்பவில்லை, அதில் என்னுடைய டெஸ்லா காரையும் அனுப்பப் போகிறேன் என்று. ஆம் அவர் சொன்னார், சொன்னபடியே தற்போது செய்து இருக்கிறார். பூமிக்கு வெளியே இப்போது முதல் கார் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது.

    கார்

    கார்

    உலகின் பெரிய ராக்கெட்டான ''ஃபல்கான் ஹெவி'' ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இதில்தான் அந்த டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் இருக்கிறது. இது அவருக்குச் சொந்தமான அவர் பயன்படுத்திய கார் ஆகும். இனி அது வானத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

    என்ன விளக்கம்

    காரை அனுப்ப அவர் டிவிட்டரில் கூறிய காரணம் மிகவும் விசித்திரமானது. அதில் ''இந்த கார் வானத்தில் மிதந்து மிதந்து அப்படியே எங்காவது செல்லும். அதை எதிர்காலத்தில் வரும் ஏலியன்கள் பார்க்க வாய்ப்பு இருக்கிறது'' என்று பதில் அளித்துள்ளார்.

    ஏலியனுக்கு செய்தி

    ஏலியனுக்கு செய்தி

    மனிதன் காமெடி செய்கிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மையிலேயே இப்போது பெரிய சாதனை ஒன்று செய்துள்ளார். அந்த காரில் ஏலியனுக்கு மெசேஜ் ஒன்று இருக்கிறது. காரில் அனைத்து சர்க்யூட் போர்டுகளிலும் ''இது பூமியில் மனிதனால் தயாரிக்கப்பட்டது'' என்று எழுதி இருக்கிறது. ஸ்பேஸுக்கு அனுப்பப்பட்ட முதல் 'மேட் இன் எர்த்' இதுதான்.

    மாஸ் விளம்பரம்

    மாஸ் விளம்பரம்

    இந்த கார் அனுப்பப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. இது அவர் வைத்து இருக்கும் அவருக்குச் சொந்தமான கார் ஆகும். அதே சமயத்தில் அந்த டெஸ்லா நிறுவனமே இவருக்குச் சொந்தமானது. இதனால் அவருடைய நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்கும். ஆனாலும் இதற்கு மேல் அவர் சம்பாதிக்க என்ன இருக்கிறது.

    பொம்மை மனிதர்

    பொம்மை மனிதர்

    இதில் விண்வெளி உடை அணிந்த பொம்மை மனித உருவம் ஒன்றும் கார் ஓட்டும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு ஸ்டார் மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும் எனப்படுகிறது.

    கேமரா இருக்கும்

    இந்த காருக்குள் அனைத்துப் பக்கமும் பெரிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கேமரா மூலம் பூமிக்கு புகைப்படம் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். வீடியோவும் அனுப்பப்பட்டு வருகிறது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+