மீண்டும் பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிரமாண்ட கைகளால் “கேட்ச்” பிடித்த ஸ்பேஸ் எக்ஸ்! முதல் முறை!
வாஷிங்டன்: விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டரை மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி காலை 8.25 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 400 அடி உயர ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.

விண்ணில் ஏவப்பட்ட 7 நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பியது. இதற்கு முன்பு ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை. இந்தச் சூழலில் மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மீண்டும் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்.
ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த ஹெவி பூஸ்டர் ராக்கெட்டை "மெக்காஸில்லா" எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது 'சாப்ஸ்டிக்ஸ்' எனப்படும் பிரம்மாண்ட கைகளால் பிடித்தது. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியிடப்பட்ட நிலையில் உலகமே வியந்து பார்த்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது ராக்கெட் சோதனையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட்டானது புவி ஈர்ப்பு விசையை மீறி ஏவுதளத்திற்கு மீண்டும் வந்திறங்கி அதிசயிக்க வைத்தது. இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை.
Starship rocket booster caught by tower pic.twitter.com/aOQmSkt6YE
— Elon Musk (@elonmusk) October 13, 2024
"நண்பர்களே, இது பொறியியல் வரலாற்றில் முக்கியமான நாள்" என்று ஸ்பேஸ்எக்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "டவர் ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டரை பிடித்துவிட்டது!" என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பலரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications