100 மில்லியன் யூரோவிற்கு ஏலத்திற்கு வந்துள்ள ஸ்பெயின் விமான நிலையம்

Subscribe to Oneindia Tamil

மாட்ரிட்: ஸ்பெயினில் செயல்படாத விமானநிலையம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலையாக 100 மில்லியன் யூரோ ஏலத் தொகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடின் தெற்குப் பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சியுடாட் ரியல் விமானநிலையம். இங்கு, கடந்த 2011 ஆம் ஆண்டின் கடைசியில் குறைந்த கட்டண விமானமான வியுலிங் இங்கு தரையிறங்கியதோடு சரி, அதற்குப் பிறகு விமானங்கள் எதுவும் அங்கு வரவில்லையாம். இதனாலேயே இந்த விமான நிலையத்திற்கு ‘பேய் விமான நிலையம்' என்ற அடைமொழியும் உள்ளது.

இந்த விமான நிலையம் தற்போது ஏலத்தில் விடப் பட உள்ளது. இதற்கான ஆரம்ப விலையாக 100 மில்லியன் யூரோ நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

மிகப் பெரிய ஓடு தளம்...

மிகப் பெரிய ஓடு தளம்...

உலகிலேயே மிக நீளமான விமானமாகக் கருதப்படும் ஏர்பஸ்-380 இறங்கக்கூடிய அளவிற்கு வசதி படைத்த ஓடுதளத்தைக் கொண்டது சியுடாட் ரியல் விமானநிலையம்.

கட்டுமானச் செலவு...

கட்டுமானச் செலவு...

வருடத்திற்கு சுமார் 10 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான வசதிகளும் இங்கு உள்ளன. இதைக் கட்டி முடிப்பதற்கான செலவு மட்டும் ஒரு பில்லியன் யூரோக்களைத் தொட்டதாம்.

திவாலான நிறுவனம்....

திவாலான நிறுவனம்....

கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு முதல் வர்த்தக விமானம் இயக்கப்பட்டது. அதற்குப்பிறகு இங்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்காததன் காரணத்தினால் இந்த நிலையத்தை இயக்கி வந்த சிஆர் ஏரோபுவர்டோஸ் என்ற நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 300 மில்லியன் யூரோக்கள் நஷ்டத்திற்கு ஆளாகி திவால் நிலைமைக்குச் சென்றது.

விமானங்களே இல்லை...

விமானங்களே இல்லை...

2011 ஆம் ஆண்டு இங்கு குறைந்த கட்டண விமானமான வியுலிங் இங்கு தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து விமானங்கள் எதுவும் அந்த விமான நிலையத்திற்கு வரவில்லையாம்.

படப்பிடிப்பு....

படப்பிடிப்பு....

அதேவருடத்தில் ஸ்பெயின் நாட்டு ஆஸ்கார் இயக்குனரான பெட்ரோ அல்மோடோவர் தனது படப்பிடிப்பிற்காக அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தினார். அதன்பின்னர் இந்த விமானநிலையத்தில் மனிதர்களின் நடமாட்டமே காணப்படவில்லை என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏலம் விட முடிவு....

ஏலம் விட முடிவு....

இதன் காரணமாக, இந்த மிகப்பெரிய விமான நிலையம் இன்று வெறும் 100 மில்லியன் யூரோவிற்கு ஏலத்தில் விடப் பட உள்ளது. இது ஆரம்ப விலை தான் என்றும், இந்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த ஏலத்திற்கான மனுக்கள் பெறப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மற்றொரு விமான நிலையம்....

மற்றொரு விமான நிலையம்....

இதேபோல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள காஸ்டலோன் விமானநிலையமும் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த விமானமும் அங்கு தரையிறங்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானநிலையங்களின் அவலம்...

விமானநிலையங்களின் அவலம்...

ஸ்பெயின் நாட்டிலுள்ள 47 விமான நிலையங்களில் பலவற்றில் தொடர்ந்து வர்த்தக விமானங்களின் செயல்பாடுகள் இருப்பதில்லை. மேலும், 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் ஆண்டுக்கு 1,00,000 அல்லது அதற்கும் குறைவான பயணிகளே வந்து போகின்றனர். தினமும் ஒரு விமானம் கூட சில நிலையங்களுக்கு வருவதில்லை எனவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார மந்தநிலை....

பொருளாதார மந்தநிலை....

பொருளாதார மந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் ஸ்பெயின் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் 0.1 சதவிகிதம் வளர்ச்சியைக் பெற்றுள்ளது. ஆயினும், அரசின் வேலையில்லாத் திண்டாட்டம் 26 சதவிகிதத்திலேயே உள்ளதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+