லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க முயற்சிக்கிறேன்! கானா நாட்டில் கலக்கிய சபாநாயகர் அப்பாவு!
கானா: தமிழக சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கானா நாட்டின் தலைநகர் அக்ரா நகரத்தில் நடைபெற்ற 66-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கில், தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சட்டசபைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு பேசியதாவது;

2003ஆம் ஆண்டு சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வுகள் மற்றும் ஊடுருவல்கள் குறித்து லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டதிலிருந்து, பல காமன்வெல்த் நாடுகளில் அதிகாரப் பகிர்வுகளை உறுதிப்படுத்துவதிலும், நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கருதுகிறேன்.
இருந்தபோதிலும், காமன்வெல்த் நாடுகள் பலவற்றிலும், இக்கோட்பாடுகளை கடைபிடிப்பதில், பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் நீடிக்கின்றன, மேலும், இந்த கோட்பாடுகள் காமன்வெல்த் நாடுகளில் ஜனநாயக வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை தொடர்ந்து வழிநடத்துவதை உறுதிசெய்ய தொடர்ந்து முயற்சிகள் தேவை.
ஒவ்வொரு உறுப்பு நாடுகளிலும் குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பரவலாக வேறுபடலாம், மேலும், 2023-ல் இந்த கோட்பாடுகளின் நிலை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று, செம்மையாக ஆட்சி செய்து, தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில், திறமையான நிர்வாகத்தை வழங்கி, தமிழக முன்னேற்றத்திற்கான வளர்ச்சிப் பணிகளை நாள்தோறும் வழங்கிவரும், நமது அன்புக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்தில், தமிழக சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
மேலும், சட்டமன்றம், நீதிமன்றம் நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.வணக்கம்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications