மார்பகத்தை அறுத்து.. தலை சதையை பிய்த்து, தோலை உரித்து கொல்லப்பட்ட பெண்.. மோப்ப நாயுடன் பரபர விசாரணை
பாகிஸ்தானில் இந்து பெண்ணை கொடூரமாக கொன்றவர்களை கண்டுபிடிக்க தனி டீம் அமைக்கப்பட்டுள்ளது
இஸ்தான்புல்: பாகிஸ்தானில் இந்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணை தீவிரமாகி உள்ளது. டிஎன்ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்காகவே ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இந்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடந்த 3 நாட்களாகவே பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது..
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் சிஞ்சோரா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்த, இந்து பெண் தயா பீல்.. இவருக்கு 40 வயதாகிறது.. கணவரை இழந்த விதவை பெண். 4 பிள்ளைகள் உள்ளனர்.

சதை தோல்
இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ம் தேதி, தயா பீல் திடீரென காணாமல் போனார்... வீட்டில் இருந்த அம்மா, திடீரென காணவில்லை என்பதால், அவரது பிள்ளைகள் நாலாபுறமும் தேடி சென்றனர்.. அப்போதுதான், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள விளை நிலத்தில் தயா பீலின் சடலம் விழுந்து கிடந்தது.. ஆனால் தலையை காணோம்.. உடம்பெல்லாம் மோசமாக சிதைக்கப்பட்டிருந்தது.. அவரது மார்பகங்கள் அறுக்கப்பட்டிருந்தது.. உடம்பில் உள்ள பல்வேறு பகுதிகள் சிதைந்து காணப்பட்டன.. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்ததும் பிள்ளைகள் கதறி துடித்தனர்..

உரித்த தோல்
இந்த தகவல் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் பாகிஸ்தானில் ஏற்படுத்தியது.. தயா பீல் குடும்பத்திற்கு அந்நாட்டின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனெட்டர் கிருஷ்ண குமாரி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் வசிக்கும் இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசானது, தங்களுடைய சிறுபான்மையினரை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்களது நலன்கள், பாதுகாப்பில் தங்களுடைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதையே இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

உரிக்க உரிக்க
இதனிடையே இது தொடர்பான பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகின.. கிடைத்த உடல்பாகங்களை கொண்டு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.. அதன் ரிப்போர்ட்டும் வெளிவந்து ஷாக்கை ஏற்படுத்தியது.. தயா பேலின் தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பாக, அவர் உயிருடன் இருக்கும்போதே, கொலையாளிகள் அவரது உடல் முழுவதும் உள்ள தோலை அப்படியே உரித்து எடுத்திருக்கிறார்கள். அந்த பெண்ணின் தலை அவரது உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. தலை முழுவதிலும் இருந்து, சதையை, பியித்து எடுத்துள்ளது தெரியவந்துள்ளது..

கதறும் உறவு
இவ்வளவு குரூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யும் அளவுக்கு, தயா பேலுக்கு எதிரிகள் யாரும் இல்லை என அவரது உறவுகள் கதறி கூறுகிறார்கள். இந்நிலையில், இந்த விசாரணை குறித்த கூடுதல் தகவல்கள் போலீஸ் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளன.. நடந்த கொடூரத்தை விசாரிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஷாஹீத் பெனாசிராபாத் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஐஜி) முஹம்மது யூனிஸ் சாண்டியோ தெரிவித்துள்ளார்.. மேலும், குற்றவாளிகளை கைது செய்வதற்கு, போலீஸ் ஸ்பெஷல் டீமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், அடுத்த சில தினங்களில் இது சம்பந்தப்பட்டவர்கள் தெரியவருவார்கள் என்றும் கூறினார்.

DNA டெஸ்ட்
இந்த விசாரணையில், மோப்ப நாய்கள் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை எந்த ஒரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த கொலை தொடர்பாக இதுவரை, 30 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை, சிலரது டிஎன்ஏ மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளதால், அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் அல்லது சில மனநோயாளிகள் இப்படியான காரியத்தை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறதாம்.

மோப்ப நாய்
தொடர் விசாரணைகள் நடந்து வந்தாலும், இப்படி ஒரு பயங்கரம், ஒட்டுமொத்த மக்களையுமே உலுக்கி எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் பெரிய சிறுபான்மை சமூகமாக இந்துக்கள் உள்ளனர். அங்கு சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிக்கிறது... கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஜனவரி வரையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மட்டுமே 36 மாவட்டங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 40,585 பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

பூஜா பூஜா
இவர்களில் 3,571 சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டனர்.. ஆனால், அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்றே இப்போதுவரை தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கூறுகின்றன.. இப்படித்தான், கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானின் சிந்து என்னும் இடத்தில் லஹரி என்பவர், 18 வயதான பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.. ஆனால், அதற்கு முன்பு, அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார். பூஜா இதை மறுத்த நிலையில், அவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications