ரூ. 25,000 கோடிக்கு போயிங் விமானங்ளை வாங்கும் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட்
துபாய்: இந்தியாவின் பட்ஜெட் பயணிகள் விமான நிறுவனமான, சன் டிவி குழுமத்தின், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தனது விமான போக்குவரத்தை விரிவுபடுத்துகிறது. இதற்காக போயிங் நிறுவனத்திடமிருந்து 40 போயிங் 737 ரக விமானங்களை அது வாங்கவுள்ளது. இதன் வர்த்தக மதிப்பு ரூ. 25,000 கோடியாகும்.
தனது விமானங்களை நவீனமாக்கும் வகையிலும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் பலமாக காலூன்றும் வகையிலும் இந்தப் புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது ஸ்பைஸ்ஜெட்.
மொத்தம் 42 போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கான ஆர்டரை ஸ்பைஸ்ஜெட் கொடுத்துள்ளதாம்.

பழைய விமானங்கள்
ஏற்கனவே 737 ரக விமானங்கள் பலவற்றை தற்போது ஸ்பைஸ் ஜெட் வைத்துள்ளது. ஆனால் இவற்றுக்கு எரிபொருள் தேவை அதிகமாக உள்ளது. புதிய விமானங்கள் எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்குமாம்.

ரூ. 25,000 கோடி
புதிய விமானங்களை ரூ. 25,000 கோடிக்கு வாங்கவுள்ளது ஸ்பைஸ்ஜெட். இந்த விமான வர்த்தகப் பரிவர்த்தனையில் தள்ளுபடி எதையும் போயிங் நிறுவனம் வழங்கவில்லையாம்.

நஷ்டத்தில்தான்
தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. புதிய முதலீட்டாளர்களையும் அது எதிர்நோக்கியுள்ளது. இருப்பினும் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிய விமானங்களை வாங்குகிறது.

கருத்துக் கூற மறுப்பு
புதிய விமானங்கள் வாங்குவது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவி்லை.

அடையாளம் தெரியாத விமான நிறுவனம்
ஆனால் போயிங் நிறுவனம் கூறுகையில், அடையாளம் தெரியாத ஒரு விமான நிறுவனம் இதேபோன்ற 164 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அடையாளம் தெரியாத நிறுவனத்தில் ஸ்பைஸ்ஜெட்டும் அடக்கம் என்று கூறப்படுகிறது.

நான்காவது பெரிய நிறுவனம்
இந்தியாவின் நான்காவது பெரிய பயணிகள் விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட். சன் குழுமத்தின் கலாநிதி மாறன் இதை வைத்துள்ளார்.

புதிய விமானத்தை வைத்து முதலீட்டாளர்களை ஈர்க்கத் திட்டம்
புதிய முதலீட்டாளர்களுக்காக காத்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், பழைய விமானங்களை வைத்திருந்தால் யாரும் வர மாட்டார்கள் என்பதால்தான் புதிய விமானங்களை பெரும் பொருட் செலவில் வாங்குவதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications