For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் 'ஜாகிங்' போன பேய்

By Siva
Google Oneindia Tamil News

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் பேய் ஒன்று ஓடியது கேமராவில் பதிவாகியுள்ளது.

அர்ஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய கால்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மைதானத்தில் பேய் ஓடியது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட இரண்டே நாட்களில் அந்த வீடியோவை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

வீடியோவில் அந்த நிழல் போன்ற உருவம் மைதானத்தில் முன்னும், பின்னுமாக ஓடியுள்ளது போட்டியை நேரில் பார்த்தவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த வீடியோவில் இருக்கும் நிழல் உருவம் பேய் இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் வேறு சிலரோ இதே பேய் வேறு ஒரு போட்டிக்கும் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பேய் இருக்கிறதா இல்லையா என்பதே இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் அண்மை காலமாக புகைப்படங்கள், வீடியோக்களில் பேய் உருவம் பதிவாவது அதிகரித்துள்ளது.

சிங்கிளா செல்ஃபி எடுக்க நினைத்தால் அங்கு கூட ஒரு பேய் வந்து நின்ற சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A ghost was seen running around a football stadium during a match in Argentina. The ghost was caught in a camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X