Sputnik V வேக்சின்.. ரிசர்ச் டேட்டாவை உடனே கொடுங்கள்.. ரஷ்யாவிடம் கேட்கும் இந்தியா.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கி வரும் ஸ்புட்னிக் -வி (Sputnik V) வேக்சின் குறித்த அடிப்படை விவரங்கள், தகவல்கள், டேட்டாக்களை வழங்க வேண்டும் என்று அந்த நாட்டிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ரஷ்யாவில் இருக்கும் இந்தியன் தூதரகம் பணிகளை செய்து வருகிறது.

Recommended Video

    America உளவுத்துறை வெளியிட்ட தகவல்.. உண்மையை மறைத்ததா China?

    கடந்த மாதம் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. வெறும் மூன்று மாத சோதனையில் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

    ரஷ்யா உருவாக்கி உள்ள வேக்சினுக்கு ஸ்புட்னிக் -வி (Sputnik V) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் மூன்றாம் கட்ட சோதனை முடிவதற்குள் இந்த தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது. மூன்றாம் கட்ட சோதனையும் மிகவும் குறைவான நபர்களிடம் ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    அந்த நாட்டு ராணுவத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஸ்புட்னிக் -வி (Sputnik V) மருந்தை தற்போது அந்நாட்டு மருத்துவர்கள் தங்களுக்கு தானே இட்டு வருகிறார்கள். அதேபோல் ரஷ்ய அதிபர் புடினின் மகளுக்கும் இந்த மருந்தை ரஷ்யா அளித்தது. இந்த மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை, அவர்களுக்கு பின் விளைவுகளும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.

    சோதனை செய்கிறது

    சோதனை செய்கிறது

    இதில் ரஷ்யா, சவுதி அரேபியா, அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை செய்யப்படும் என்று கூறுகிறார்கள். ஆகஸ்ட் 3ம் தேதியில் இருந்து இந்த சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் இந்த மருந்து செப்டம்பர் மாதம் மக்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 2020 இறுதிக்குள் 3 கோடி மருந்துகளை தனது நாட்டிற்குள் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருகிறது.

    ஆனால் குழப்பம்

    ஆனால் குழப்பம்

    ஆனால் உலக நாடுகள் இந்த மருந்து குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் உற்ற நண்பன் சீனா கூட இந்த மருந்தை வாங்கும் எண்ணத்தில் இல்லை. இந்த மருந்தை சரியாக சோதனை செய்யவில்லை. அதனால் இதன் பாதுகாப்பு குறித்து சந்தேகம் உள்ளது என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளது. இன்னும் பலருக்கு சோதனை செய்து, அதன் டேட்டாக்கள் வந்தால் மட்டுமே மருந்தை பயன்படுத்துவோம் என்று பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளது .

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்த நிலையில் இந்த தடுப்பு மருந்தை வாங்குவது குறித்து இந்தியா ஆலோசனை செய்து வருகிறது. இந்த மருந்து முழுமையாக பாதுகாப்பாக இருந்தால் , அதை வாங்கலாம் என்று இந்தியா நினைக்கிறது. ஆனால் இதற்கான உறுதியான டேட்டாக்கள் கிடைக்கவில்லை. ரஷ்யா தங்கள் டெஸ்ட் தகவல்களை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. எத்தனை பேருக்கு சோதனை செய்யப்பட்டது. முடிவுகள் எப்படி வந்தது, என்ற டேட்டாக்கள் இல்லை.

    தூதரகம் கோரிக்கை

    தூதரகம் கோரிக்கை

    ஸ்புட்னிக் -வி (Sputnik V) வேக்சின் குறித்த அடிப்படை விவரங்கள், தகவல்கள், டேட்டாக்களை வழங்க வேண்டும் என்று அந்த நாட்டிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ரஷ்யாவில் இருக்கும் இந்தியன் தூதரகம் பணிகளை செய்து வருகிறது. டேட்டாக்களை எங்களுக்கு கொடுங்கள், நாங்கள் திருப்தி அடைந்தால் உங்கள் மருந்துகளை வாங்கிக் கொள்கிறோம், என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது. இதனால் ரஷ்யா தனது வேக்சின் விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+