ஆசிய விளையாட்டு போட்டி முடிந்ததும் தலைமறைவான இலங்கை ஹாக்கி வீரர்!
Subscribe to Oneindia Tamil
இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த உடனேயே இலங்கை ஹாக்கி வீரர் பிரசன்ன திசநாயக்கே தலைமறைவாகியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
தென்கொரியாவின் இன்சியானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தது முதலே இலங்கை ஹாக்கி வீரர் பிரசன்ன திசநாயக்கேவை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை அவரது இருப்பிடம் எங்கே என்பது தெரியவில்லை.
அவர் ஒருவேளை கொரியாவிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications