இலங்கை சிறையில் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்
கொழும்பு: இலங்கையில் நீண்ட நாட்களாக சிறையில் அடைத்து வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முன்னாள் விடுதலைப்புலிகள் 13 பேர் தங்களை நீண்ட காலமாக சிறையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினர். தங்கள் மீதான வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் 4 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைத்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் புலிகள் மீதான விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு துறை அமைச்சர் ஸ்வாமிநாதன் உறுதி அளித்தார். இதையடுத்து கைதிகள் 13 பேரும் தாங்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
கொழும்பின் வடக்கு யாழ்ப்பாணம் தீபகற்ப பகுதியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல ஆண்டுகளாக போராடிய விடுதலை புலிகள் அமைப்பினரை இலங்கை ராணுவம் போரில் வீழ்த்தியதை அடுத்து, வழக்கு விசாரணை இன்றி கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications