Iran War: இந்தியாவை நெருங்கிய போர்? இந்திய பெருங்கடல் அருகே மூழ்கிய ஈரான் போர்க்கப்பல்.. 30 மாலுமிகளை மீட்ட இலங்கை
கொழும்பு: ஈரானின் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி கடலில் மூழ்கடித்து வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா - இலங்கை அருகே இந்திய பெருங்கடல் அருகே மூழ்கிய ஈரானின் போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படை காப்பாற்றி உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளன. கடந்த 28 ம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானில் சுமார் 2 ஆயிரம் இடங்களை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் 'அட்டாக்' செய்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் கடலில் வலம் வரும் ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகின்றன.
17 போர்க்கப்பல்கள்
தற்போது வரை 17 ஈரானின் போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இப்படியான சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐரிஸ் டெனா போர்க்கப்பல்
அதாவது நம் நாட்டின் அண்டை நாடான இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஈரான் நாட்டின் போர்க்கப்பல் இன்று காலையில் மூழ்கி உள்ளது. அந்த கப்பலில் பெயர் ஐரிஸ் டெனா. இது Frigate வகை போர்க்கப்பலாகும். இந்த கப்பலில் இருந்த மாலுமிகள் உடனடியாக இலங்கையிடம் உதவி கோரினர்.
30 மாலுமிகள் மீட்பு
இலங்கை சார்பில் உடனடியாக உதவி வழங்கப்பட்டது. இலங்கையின் இரண்டு கடற்படை இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே மூழ்கிக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து 30 மாலுமிகளை இலங்கைக் கடற்படையினர் மீட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது.
2 கடற்படை கப்பல்களும், ஒரு விமானமும் சம்பவ இடத்துக்கு விரைந்தது. இதையடுத்து 30 மாலுமிகள் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை இலங்கையின் கடற்படை செய்தி தொடர்பாளர் புத்திக சம்பத் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர், ''இந்த மீட்பு நடவடிக்கை கடல்சார் கடமைகளின் அடிப்படையில் நடந்துள்ளது. இந்திய பெருங்கடலில் எங்களுக்கான தேடல் மற்றும் மீட்பு பகுதிக்குள் (Search and Rescue Area in the Indian Ocean) பகுதிக்குள் நடந்ததால் நாங்கள் அவர்களை மீட்க உதவினோம்'' என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர்
இதுபற்றி இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''180 மாலுமிகளுடன் இருந்த ஈரானின் கப்பல் மூழ்கியது. இதில் 30 பேர் காயமடை்நதனர். அவர்களை மீட்டு இலங்கையின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்'' என்றார்.
பின்னணியில் அமெரிக்கா?
இருப்பினும் இந்த போர்க்கப்பல் எப்படி மூழ்கியது? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுபற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினர். ஈரானின் கப்பல் அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் குண்டுவீசி தாக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ஆளும் அரசு சார்பில் உடனடியாக பதிலளிக்கவில்லை.
இந்தியாவை நெருங்கிய போர்
மேலும் ஈரானுக்கும், இந்தியாவுக்கும் இடையே அரபிக்கடல் உள்ளது. இந்த கடல்பகுதி வழியாக இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் இடையே கடல்வழி வர்த்தகம் நடந்து வருகிறது. அதேபோல் இந்தியா - இலங்கை இடையே இந்திய பெருங்கடல் உள்ளது. தற்போது ஈரானின் போர்க்கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியின் அருகே மூழ்கி உள்ளது.
இந்த இடம் இலங்கை கடற்படையின் அவசரகால தேடல், மீட்பு பணிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பகுதியாகும். இதனால் இலங்கை உதவி உள்ளது. இதனால் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் போர் இந்திய பெருங்கடல் வரை நீண்டுவிட்டதா? இந்தியா - இலங்கையை நெருங்கிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications