ஷமி, சிராஜ் இந்தியாவில் பிரகாசிக்கிறாங்க.. இலங்கை அணியில் இனப்பாகுபாடு - விளாசிய ஈழத்தமிழ் எம்பி
கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியில் இனப்பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றும், இலங்கை அணியில் இனப்பாகுபாட்டுடன் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தினார்.
முன்னாள் ஐசிசி உலக சாம்பியனான இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளை விட சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை தழுவி வெளியேறி இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியுடன் படுதோல்வியை அந்த அணி தழுவியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வில் நடக்கும் அரசியல் குறித்தும் விவாதங்கள் எழுந்து உள்ளன.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பேசுகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள இனவாத அரசியலை தோலுரித்துக்காட்டினார். அவர் பேசுகையில், "இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி பரிதாபகரமான நிலையில் உள்ளது. அடுத்து நடைபெறா உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஏறக்குறைய தகுதி நீக்கம் செய்யப்படும் நிலைமையில் உள்ளது.
1996 ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த இலங்கை கிரிக்கெட் அணி இன்று பரிதாப நிலையில் இருப்பதற்கு நிர்வாகிகளும் அதற்கு அப்பால் ஊழல் விசயங்களும், அனைத்துக்கும் மேலாக விளையாட்டில் நிலவி வரும் அரசியல் தலையீடுகள் மேலாதிக்கம் செலுத்துவதுமே காரணம். இதனால் தான் இன்று இலங்கை கிரிக்கெட் அணி பலவீனமான நிலையை அடைந்து உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியை ஒரு முழுமையான அணியாக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தியா மிகப் பெரிய ஒரு நாடு. பல மாநிலங்களைக் கொண்டது. இந்திய கிரிக்கெட் அணியில் மத ரீதியான, இன ரீதியான, மாநில ரீதியான வேறுபாடுகள் எல்லாம் கடந்து திறமையானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் மிக திறமையாக பிரகாசித்து வருபவர்கள் அங்கே சிறுபான்மையினராக இருக்கும் வீரர்களான முஹம்மது சிராஜ் மற்றும் முஹம்மத் ஷமிதான். நாட்டுக்காக அனைத்தையும் கடந்தவர்களாக இந்தியாவின் வெற்றியில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இலங்கை கிரிக்கெட் அணியில் சிறுபான்மை இனத்தவர்கள் ஓரங்கட்டப்படும், புறக்கணிக்கப்படும் நிலைமை இருந்து வருகிறது. நிர்வாக குழப்பம் ஒரு புறம் என்றால், தேர்வுக் குழுவில் உள்ளவர்கள், கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், அரசியல்வாதிகள் இனவாதத்தின் அடிப்படையில் சிந்திக்கின்றனர். இதன் காரணமாக இலங்கையில் சிறுபான்மை இனங்களை சேர்ந்த திறமை வாய்ந்த வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வடக்கிலிருந்து தேசிய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்ட வியாஸ்காந்த் எல்.பி.எல். போட்டியில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு உரிய பயிற்சிகள் அளித்து இடம் வழங்கினால் இலங்கையின் வெற்றிக்கு அவரால் பங்களிக்க முடியும்.
கால்பந்தாட்ட சம்மேளனத்தைப் பாருங்கள். பல பிரச்சனைகள் காணப்பட்டன. ஆனால் இன்று நல்ல நிலைக்கு வந்து உள்ளார்கள். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் கூட இன்று அவர்களை ஏற்றுக்கொண்டு உள்ளது. இலங்கையின் தமிழ், முஸ்லிம் இனங்களை சேர்ந்த வீரர்கள் அதில் விளையாடி வருகின்றனர். அங்கு இனப்பாகுபாடு காட்டப்படவில்லை. ஆனால், இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு உள்ளது. அதை நிறுத்த வேண்டும். இது இலங்கை கிரிக்கெட் அணியல்ல. ஒரு சிங்கள அணி என்ற நிலையில் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட்டு இலங்கை அணி என சொல்லும் வகையில் சகல இனங்களும் அணியில் சேர்க்கப்பட வேண்டும்." என்றார்.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications