இலங்கை இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு- நாடாளுமன்றம் இன்று இரவு கலைப்பு?
கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்த நிலையில் இடைக்காக பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முன்னிலையில் ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். மேலும் இலங்கை நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் இடதுசாரி, சிங்களப் பேரினவாத கட்சியின் தலைவர அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று நேற்று பதவியேற்றார். அனுர குமார திசநாயக்க பதவியேற்பதற்கு சற்று முன்னதாக, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார். இதனையடுத்து தினேஷ் குணவர்த்தன தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

இந்த நிலையில் இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். மேலும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் படி இன்று இரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவை பிறப்பிக்க இருக்கிறார் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க. இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 9-வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பொறுப்பேற்றுக் கொண்டார். அதாவது இலங்கையில் பிரதமரை விட ஜனாதிபதிக்கே அதிக அதிகாரம் என்பதால் 'நிறைவேற்று' ஜனாதிபதி என குறிப்பிடப்படுகிறது.
ஆனால் ஜனாதிபதி தேர்தலின் போது ஜேவிபி தரப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அமையும் புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை கைவிடுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அப்படி ஒரு மசோதா நிறைவேறினாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் முதலே இது நடைமுறைக்கு வரும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications