ஜனாதிபதி தேர்தல்: டிவி விவாதத்தில் சரமாரியாக அடித்துக் கொண்ட இலங்கை மலையக தமிழ் எம்பிக்கள்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதத்தில் இலங்கை மலையகத் தமிழ் எம்பிக்களான வேலுகுமார், திகாம்பரம் ஆகியோர் சரமாரியாக அடித்துக் கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மலையகத் தமிழரின் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கேவை வேலுகுமார் ஆதரித்ததால் டிவி விவாதத்தில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, அரியநேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். ஈழத் தமிழரின் 7 கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். மலையகத் தமிழரான இந்திய வம்சாவளித் தமிழர்களின் தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என முடிவெடுத்திருந்தது.

இந்த நிலையில் டிவி விவாதம் ஒன்றில் மலையகத் தமிழ் எம்பிகள் வேலுகுமார், திகாம்பரம் இருவரும் பங்கேற்றனர். தமிழ் முற்ற்போக்குக் கூட்டணியின் முடிவை மீறி வேலுகுமார், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார். டிவி விவாதத்தின் போது வேலுகுமாரின் முடிவை திகாம்பரம் கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவாதத்தில் வேலுகுமாரும் திகாம்பரமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். ஒருவரை ஒருவர் துரோகி என விமர்சித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடைமொழிகளால் கேலி செய்தனர். இதனால் டிவி விவாதம் அனல் பறந்தது.
ஒரு கட்டத்தில் வேலுகுமாரும் திகாம்பரமும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மலையகத் தமிழ் எம்பிக்களின் இந்த மோதல் அப்படியே டிவியில் லைவ்வாகவும் ஒளிபரப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரையும் டிவி விவாத நிகழ்ச்சி நெறியாளர் சமாதானப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்தும் இருதரப்பு ஆதரவு தலைவர்களும் யார் செய்தது தவறு? என அடுத்த விவாதத்தில் களமிறங்கி உள்ளனர். இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் எம்பிக்கள் பகிரங்கமாக டிவி நிகழ்ச்சியில் மோதிக் கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications