வளைகுடாவில் வாடும் இந்தியர்களை விரைந்து காப்பாற்றுங்கள்: எம்.பி.க்கள் வலியுறுத்தல்
சென்னை: சவூதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தை நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து வேலூர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் மற்றும் திமுக எம்.பி.
கனிமொழி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு மேலும் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் மத்திய அமைச்சர் இ. அகமது ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து அப்துல் ரஹ்மான் எம்.பி. கூறுகையில்,
சவூதி அரசு சுமார் 60,000 பேரை கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. சிறைகளில் ஏராளமான இந்தியர்கள் இருக்கிறார்கள். பல இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவியபோதிலும், இன்னும் பலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்பான்சர்களிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்தவர்கள் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். இந்திய பணியாளர்கள் ஏதோ ஆட்டு மந்தைகளில் ஆடுகள் போன்று அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும் அவர் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சக நிலைக்குழுவில் உள்ள 5 எம்.பி.க்கள் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications