காசாவுக்கு உதவும் எலான் மஸ்க்.. இண்டர்நெட் சேவையை வழங்கும் ‛ஸ்டார்லிங்க்’..இஸ்ரேலுக்கு கடும் கோபம்
இஸ்ரேல்: காசாவில் இண்டர்நெட் மற்றும் தொலைதொடர்பு சேவைகளை இஸ்ரேல் துண்டித்துள்ளது. இதனால் காசா மக்கள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலையில் தான் எலான்மஸ்க் தனது ஸ்டார்லிங்க் மூலம் உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் என்பது போராக மாறியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு கடந்த 7ம் தேதி 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது.

இதில் 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததனர். இதையடுத்து இஸ்ரேல் போர் தொடங்கி உள்ளதாக கூறி காசா மீது வான்வெளி தாக்குதலை தொடங்கியது. இன்று 22 நாட்களாக காசா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் 3,000 குழந்தைகள் உட்பட 7,326 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 32 பத்திரிகையாளர்களும் அடங்குவர்.
இதற்கிடையே தான் காசாவின் எல்லையில் முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இதனால் காசாவில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள் வரும் நாட்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
தற்போது இண்டர்நெட் வசதி, தொலை தொடர்பு சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கும் வயர்களை இஸ்ரேல் துண்டித்துள்ளதால் மேலும் பல இடங்கள் மின்சாரமின்றி இரவில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் காசா பகுதியில் இணையதள சேவை முடக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தான் எலான் மஸ்க் உதவி செய்வதாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க் ‛ஸ்பேஸ்எக்ஸ்' செயற்கைகோள்களின் தொகுப்பான ‛ஸ்டார்லிங்க்' மூலம் இணையதள வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதாவது அமெரிக்காவின் ஏஓசி பிரதிநிதியாக அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ தனது எக்ஸ் பக்கத்தி்ல, ‛‛காசாவில் இணையதளம் மற்றும் தகவல் தொடர்புக்கான வயர்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த செயலை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 2.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாலஸ்தீனத்தின் தகவல் தொடர்பு வசதிகளை துண்டித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. பத்திரிகையாளர்கள், டாக்டர்கள், மனிதாபிமான அடிப்படையில் உதவும் நபர்கள் மற்றும் அப்பாவி மக்கள் என அனைவரும் ஆபத்தில் உள்ளனர். அமெரிக்கா இதனை கண்டிக்கிறது '' என தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவுக்கு எலான் மஸ்க் ரீப்ளே செய்தார். இதுதொடர்பாக எலான் மஸ்க், ‛‛காசாவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிறருக்கு உதவும் நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங் இணையசேவையை வழங்கும்'' என தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் என்பது ஸ்பேஸ் எக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கோள்களின் கூட்டமைப்பாகும். இது இணையதள சேவைகள் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பின்தங்கிய கிராமங்கள், மக்களுக்கு இலவச இணையதள வசதிகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே எலான்மஸ்க்கின் இந்த செயலால் இஸ்ரேல் கோபமடைந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications