டாக்டரோட ஸ்டெதாஸ்கோப்பிலிருந்தும் பாக்டீரியா பரவுமாம்... ஜாக்கிரதை!
ஜெனிவா: பாக்டீரியாக்கள் பரவ ஸ்டெதாஸ்கோப்பும் ஒரு காரணம் என ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் கைகளின் மூலம் பாக்டீரியாக்கள் பரவுகின்றன என்றார்கள்.
ஆனால், தற்போது மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாக்டீரியா தொற்று:
ஜெனிவா மருத்துவமனைகளின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உடல் பரிசோதனை மூலம் மருத்துவரின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்பும் பரப்பும் பாக்டீரியாக்களின் அளவைக் கண்டறிந்துள்ளனர்.

நோயை பரப்பும் ஸ்டெத்ஸ்:
71 நோயாளிகளை மூன்று மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்கும்போது அவர்களில் ஒருவர் ஒவ்வொருமுறையும் சுத்தம் செய்யப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பையும், கையுறைகளையும் பயன்படுத்தியதன்மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாக்டீரியா ஆராய்ச்சி:
ஒரு நோயாளியின் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டபின் ஸ்டெதாஸ்கோப்பின் குழாய் மற்றும் அடிப்பகுதி, மருத்துவரின் கைகளின் நான்கு பகுதிகள் போன்றவற்றில் சேரும் பாக்டீரியாக்களின் அளவு தனித்தனியே கணக்கிடப்பட்டது. மருத்துவர்களின் விரல்நுனியும், ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்பகுதியும் பாக்டீரியாக்கள் அதிகம் சேரும் இடங்களாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

டாக்டர்ஸ் கவனிங்க பிளீஸ்:
மேலும் இத்தகைய ஒப்பிடுதலை நேரடியாக நடத்திய முதல் ஆய்வு இதுவென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஒரு நாளில் தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஸ்டெதாஸ்கோப் பல நோயாளிகளின் தோல்பரப்பின் மீது நேரடியாக வைக்கப்படுகின்றது.

கடும் விளைவுகள்:
இதனால் எம்ஆர்எஸ்ஏ போன்ற கடுமையான தொற்றுவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இந்தக் கருவியில் சேர வாய்ப்புண்டு.

மருந்து எதிர்ப்பு பாக்டீரியா:
அதுமட்டுமின்றி மருந்து எதிர்ப்பு தன்மை உடைய பாக்டீரியாக்களும் நோயாளி பரிசோதனையின்போது இந்தக் கருவியில் படிய வாய்ப்புள்ளது என்பதால் பாக்டீரியாக்களைப் பரப்புவதில் ஸ்டெதாஸ்கோப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தலைமை ஆராய்ச்சியாளரான டிடியர் பிட்டெட் தெரிவித்தார்.

சுத்தம் அவசியம் மருத்துவர்களுக்கும்:
தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications