இவரா அதிபரின் ஆலோசகர்.. அதிர்ச்சியில் அமெரிக்கா.. 3வது உலக போர் கன்பார்ம்தானோ?
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், சர்ச்சைக்குறிய முடிவை இப்போதே எடுத்துள்ளார். ட்ரம்ப்பை போலவே சர்ச்சைகளை சம்பாதித்து வைத்துள்ள, வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஸ்டீவன் பன்னனை, அதிபரின் தலைமை ஆலோசகராக நியமிக்க உள்ளாராம் ட்ரம்ப்.
ஸ்டீவன் பன்னோன், யூதர்கள், குடியேறிகள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொள்கையை கொண்ட தீவிர வலதுசாரியாளர். ட்ரம்ப்பை போலவே, இவரது கொள்கைகளும் இருப்பதால் அச்சத்திலுள்ளனர் அமெரிக்க சிறுபான்மை மக்கள்.

62 வயதாகும் ஸ்டீவன் பன்னன் ட்ரம்ப்பின் பிரசாரத்தை வடிவமைத்து தரும் பதவியில் இருந்தார். அதிபரின் ஆலோசகர் பதவியில் இதற்கு முன்பு இருந்த கர்ல் ரோவ் மற்றும் வலெரி ஜர்ரெட் ஆகியோர் சர்ச்சையை சம்பாதித்தவர்கள். ஆனால் அவர்களுக்காவது நீண்ட கால கட்சி நடைமுறை, அரசியல் அனுபவம் இருந்தது. ஆனால், ஸ்டீவன் பன்னன் பத்திரிகைக்காரர்.
Breitbart News என்ற வலதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட வெப்சைட்டின் தலைமை பதவியில் இருந்தவர். இந்த வெப்சைட் தொடர்ச்சியாக ஜனநாயக கட்சி முக்கிய பிரமுகர்களை தாக்கி வந்தது. வீக்லி ஸ்னேன்டர்ட் பத்திரிகை ஆசிரியர் பில் கிறிஸ்டலை யூதர் என கூறி குறி வைத்து தாக்கியது. வெள்ளை ஆதிக்க சிந்தனை கொண்ட ஸ்டீவன், அதிபரின் ஆலோசகராவது அமெரிக்காவை எங்கு கொண்டு நிறுத்தும் என தெரியாது.
கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா ஆட்சியில்தான் அதிக கருப்பினத்தவர்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். நிலைமை இப்படி மோசமாக இருக்கும்போது ஸ்டீவன் வருகை இதை மேலும் ஆபத்துக்குள்ளாக்கலாம்.
ஹார்வார்ட் பிசினஸ் பள்ளியில் படித்த ஸ்டீவன், பன்னன் தனது சிந்தனைகளை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வெற்றி பெற்றவர் என கூறுகிறார்கள் அவரின் வெப்சைட்டில் பணியாற்றிய ஊழியர்கள்.
அந்த செய்தி இணையதளத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் குர்ட் பர்டெல்லா கூறுகையில், ட்ரம்ப்பின் பிரசாரத்திற்கு ஊதுகுழலாக இருந்த Breitbart வெப்சைட் இனிமேல் அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்டீவ் ரொம்பவே அக்ரசிவானவர். அதிரடி தேவை அவருக்கு. எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார், பலவீனத்தை வெளியில் காட்ட மாட்டார். தனது வெள்ளை மாளிகை அதிகாரத்தை எதிரிகளை பழி வாங்கவே அவர் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.
ஸ்டீவன் பேக்ரவுண்டை பார்த்தால், நாஸ்டர்டாமஸ் கணித்தபடி 3வது உலக போருக்கு முகூர்த்தம் குறித்து விடுவார் போல இருக்கிறதே.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications