மாடல் பொம்மையா? மனிதனா?... துணிக்கடையில் இவரைப் பார்த்து குழம்பாதவர்களே இல்லை!
வாஷிங்டன்: பெண்களுடன் துணியெடுக்க கடைக்குச் செல்லும் கணவன்கள் குறித்து நம்மூரில் பரவலாக பல ஜோக்குகள் சொல்லப் படுவதுண்டு. ஆனால், அமெரிக்காவில் தன் மனைவியுடன் துணியெடுக்கச் சென்ற போது பொழுதுபோக்கிற்காக ஒரு கணவர் செய்த செயல் தற்போது அவரது தொழிலாகவே மாறி விட்டது.
அமெரிக்காவின் அன்றாட நாட்டு நடப்புகளை இணையத்தில் கிண்டலடித்துக் கொண்டிருந்த அந்தக் கணவர் தற்போது வித்தியாசமான துறையில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா...? இதோ மேற்கொண்டு படியுங்கள்....
ஷாப்பிங்....
இணையதளத்தில் தனது நகைச்சுவையான எழுத்துக்கள் மூலம் பிரபலமானவர் ஸ்டீவ் வெனகெஸ் என்ற பத்திரிக்கையாளர். இவர் ஒருநாள் தனது மனைவியுடன் துணிக்கடை ஒன்றிற்கு ஷாப்பிங் சென்றுள்ளார்..
அட என்னைய மாதிரியே...
ஸ்டீவின் மனைவி நீண்டநேரமாக ஆடையைத் தேர்வு செய்து கொண்டிருக்க மாடல் பொம்மை அருகே அமர்ந்திருந்த ஸ்டீவ், அப்போது தான் கவனித்திருக்கிறார் மாடல் பொம்மை தன்னைப் போன்ற உடல் அமைப்பில் இருப்பதை.
ஷாக்...
உடனடியாக, மனைவிக்கு வேடிக்கைக் காட்ட நினைத்தவர் மாடல் பொம்மை அணிந்திருந்தது போன்ற உடையை தானும் அணிந்து அப்பொம்மையின் அருகே சென்று நின்றுள்ளார். டிரையல் ரூமை விட்டு வெளியே வந்த மனைவி அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.
ஸ்மைல் ப்ளீஸ்...
மாடல் பொம்மையின் அருகே அதைப்போலவே உடையணிந்து நிற்கும் ஸ்டீவைப் பார்த்த கடையிலிருந்த பொதுமக்கள் ஆர்வமாக அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். இது ஸ்டீவை மேலும் குஷியாக்கி விட்டது.
வேடிக்கையே வாடிக்கை...
அதிலிருந்து எந்தக் கடைக்குச் சென்றால் அங்கிருக்கும் மாடல் பொம்மையைப் போன்றே உடை அணிந்து அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக்கி விட்டார் ஸ்டீவ்.
தனி வலைப்பக்கம்...
மேலும், தான் அவ்வாறு எடுக்கும் வித்தியாசமான புகைப்படங்களைப் போடுவதற்கென்றே தனி வலைப்பக்கம் ஒன்றையும் தொடங்கி விட்டார்.
பிசினஸ்....
ஸ்டீவின் இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த சில ஜவுளிக் கடைக்காரர்கள் அவரை நடமாடும் மாடல் பொம்மையாக்கி விட்டார்கள். ஆம், தினமும் சில மணி நேரங்கள் மாடல் பொம்மையின் அருகில் வந்து நின்று செல்ல ஸ்டீவிற்கு அவர்கள் சம்பளம் கொடுக்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications