தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் – ஒருவர் பலி, 75க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பாங்காக்: தாய்லாந்தில் சியாங்ராய், சியாங்மய் ஆகிய மாகாணங்களில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் கட்டிடங்கள் மற்றும் கோவில்கள் சேதம் அடைந்தன.

பல இடங்களில் ரோடுகளில் விரிசல் ஏற்பட்டது. சியாங்ராய் மாகாணத்தில் சயங்லிங்காம் என்ற இடத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 83 வயது பெண் பலியானார். 75 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிய அளவில் 50 தடவை பூமி அதிர்ந்தது. இதனால் பீதியில் உறைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினார்கள். இதனால் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications