சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு!

Subscribe to Oneindia Tamil

சிலி: சிலி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது, ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.

தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் 7.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, சிலியின் தெற்கு பகுதியில் இருந்து 570 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான நில நடுக்கம், அடுத்தடுத்து அதிகரித்து 7.2 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தை ஒட்டி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகளும், கட்டிடங்களும் பயங்கரமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+