18வது குழந்தையைப் பெற்றெடுத்த பிரிட்டனின் பெரிய குடும்பத்தின் ”அப்பா- அம்மா”!
லண்டன்: பிரிட்டனில் ஏற்கனவே 2 பேரக் குழந்தைகள் உள்ள தம்பதி தங்களது 18வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளது.
ஹேல்லி ஆல்பியா பியு என்று அந்த பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அக்குழந்தையின் புகைப்படத்தை குழந்தையின் தாய் சுவ் ரோட்போர்ட் மற்றும் தந்தை நோயல் ஆகியோர் சோஷியல் மீடியாவில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்துள்ளனர்.
நிம்மதியடைந்த சுவ்:
கடந்த ஆண்டில் தனக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதால் பயத்தில் இருந்த சுவ், தற்போது ஹேல்லி எவ்வித சிக்கலும் இன்றி பிறந்ததால் நிம்மதியடைந்துள்ளார்.
14 வயதில் முதல் குழந்தை:
பதினான்கு வயதில் தனது முதல் குழந்தையான கிரிஸ்சை பெற்றெடுத்த சுவ் தற்போது 18வது குழந்தையை பெற்றெடுத்ததால் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நீளும் குழந்தைகள் பட்டியல்:
முதல் மகனான கிரிஸ்சுக்கு தற்போது 25 வயது ஆகும் நிலையில், இத்தம்பதிக்கு 19 வயதில் க்ளோ, 17 வயதில் ஜேக், 15 வயதில் டேனியல், 14 வயதில் லூக், 13 வயதில் மில்லி, 12 வயதில் கேட்டி, 11 வயதில் ஜேம்ஸ், 9 வயதில் எல்லி, 8 வயதில் எய்மி, 7 வயதில் ஜோஷ், 6 வயதில் மேக்ஸ், 4 வயதில் டில்லி, 3 வயதில் ஆஸ்கர், 2 வயதில் கேஸ்பர் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

பேரக்குழந்தைகள் எடுத்த தம்பதி:
மேலும் இத்தம்பதியருக்கு 2 பேரக்குழந்தைகளும் உள்ளன. 10 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தங்கியுள்ளனர்.
அடுத்த வருடமும் குழந்தை உண்டு:
தங்களது 18 ஆவது குழந்தையோடு குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தப்போவதாக கடந்த ஆண்டு கூறிய சுவ் தம்பதியினர் தற்போது மற்றொரு குழந்தையையும் அடுத்த ஆண்டு பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications