Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென நீல கலரில் மாறிய சூரியன்! அடுத்த சில வருடம் பூமியில் வெப்பமே இல்லையாம்! உலுக்கி போட்டுடுச்சு

Subscribe to Oneindia Tamil

எடின்பர்க்: சூரியன் தான் நமது பூமிக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூரியன் கடந்த காலங்களில் ஒரு சமயம் திடீரென நீல கலரில் மாறிவிட்டதாம். இதனால் பூமியில் கூட அடுத்த சில ஆண்டுகளுக்கு மேஜர் மாற்றம் நடந்துள்ளது. ஏன் இதுபோல சூரியன் நீல கலரில் மாறியது.. இதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.

நமது இந்த பூமிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்திற்கும் சூரியன் தான் அடிப்படை ஆதாரம். சூரியனில் இருந்து வரும் சூரிய கதிர்கள் தான் நமது பூமி இயங்க பிரதானமாக இருந்து வருகிறது.

science earth sun

ஐன்ஸ்டீன் தலையை பிளந்து.. மூளை திருடி, 240 துண்டா வெட்டிய வினோதம்! காரணத்தை கேட்டால் மிரண்டு போவீங்க


அப்படிப்பட்ட சூரியனின் நிறம் திடீரென நீல கலரில் மாறினால் எப்படி இருக்கும். அதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு ஒரு சமயம் நடந்துள்ளது. ஏன் அப்படி நடந்தது. இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நீல கலரில் மாறிய சூரியன்:

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1830 காலகட்டத்தில் தான் இதுபோல பூமியின் வளிமண்டலத்தில் சூரியன் நீல நிறமாக மாறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் பூமியில் இருந்து பார்த்தோருக்குச் சூரியன் நீல கலரில் தெரிந்துள்ளது. ஏன் இதுபோல நடந்தது.. இதற்கு என்ன காரணம் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.


இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்த சூழலில், அதற்கான பதிலை இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது 1831ஆம் ஆண்டில் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எரிமலை வெடிப்பே சூரிய நிறம் மாற காரணமாக இருந்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். அதாவது பொதுவாக எரிமலை வெடிக்கும்போது சல்பர் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் ரிலீஸ் ஆகும். இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதி திடீரென குளிர்ச்சியானதாக மாறும்.


என்ன காரணம்:

1831ல் நடந்தது மிகப் பெரிய எரிமலை வெடிப்பாக இருந்தது. இதனால் அதிகளவில் சல்பர் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் வெளிப்பட்டு இருக்கிறது. இது வளி மண்டலத்திலும் கூட மாற்றத்தை ஏற்படுத்தவே இதன் காரணமாகவே சூரியன் அப்போது நீல கலரில் மாறி இருக்கிறது. இது மட்டுமின்றி எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த பூமியின் காலநிலையும் கூட அடுத்த சில ஆண்டுகள் மாறி இருக்கிறது. கோடைக் காலமே இல்லாமல்.. பூமி முழுக்க முழுக்க குளிர்ச்சியாகவே இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஆய்விதழில் இது தொடர்பான விரிவான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள சிமுஷிர் என்ற மக்கள் நடமாட்டம் இல்லாத தீவில் ஜவாரிட்ஸ்கி என்ற எரிமலை உள்ளது. அந்த எரிமலை வெடித்ததே பூமியின் வெப்பம் குளிர காரணமாக இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் உருவான பனிக்கட்டிகளை ஆய்வு செய்த போது ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை உறுதிப்படுத்தினர்.

இவ்வளவு காலம் கண்டுபிடிக்க முடியவில்லை ஏன்:

அதாவது அந்த தீவு தொலைதூரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்ததால் எரிமலை வெடிப்பு குறித்து யாருக்கும் தெரியவில்லை. அதேநேரம் எரிமலையில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலையும் ஸ்காட்லாந்தில் பனிக்கட்டிகளில் இருந்த சாம்பலையும் ஆய்வு செய்த போது, இரண்டும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் உருவானது தெரிய வந்தது. அதிலும் இது 1831ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் தான் எரிமலை வெடித்தது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் சூரியனின் கலர் மாறியுள்ளது.

மீண்டும் நடக்கலாம்:

இது எப்போதோ 1800களில் நடந்தது. இதை எதற்கு இப்போது ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். மீண்டும் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டறியவே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்த நூற்றாண்டிற்குள் மீண்டும் இதுபோல மிகப் பெரிய வெடிப்பு நடந்து, இதனால் பூமியில் மிகப் பெரிய காலநிலை மாற்றம் நடக்க 6ல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+