சூப்பர் மாடல் ஆன்டிரஜ் ஆனார் ”ஆன்டிரஜா” – பெண்ணாக மாறிய ஆண்
நியூயார்க்: ஆணாக இருந்து வந்த சூப்பர் மாடல் ஒருவர் திடீரென பெண்ணாக மாறியுள்ளார்.
இனிமேல் பெண்களின் ஆடைகளுக்கு தான் மாடலிங் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆன்டிரஜ் பெஜிக் என்ற பெயர் கொண்ட அந்த சூப்பர் மாடல் இதுதொடர்பாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அட்டைப்பட அழகன்:
எல்லி, பிரெஞ்ச் வோக் போன்றவற்றின் அட்டைப் படத்தில் சிலமுறை இடம் பெற்றவர் இவர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரேம்ப் வாக்கிலும் கலந்து கொண்டுள்ளார்.
நீங்களாகவே இருங்கள்:
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், என்னைப் போன்ற அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அவ்வாறாகவே இருங்கள். அதற்காக பெருமைப்படுங்கள்.
மனித உரிமைகள்:
அனைத்து மனிதர்களும் மரியாதைக்குரியவர்கள்தான். அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அடிப்படையில் மனித உரிமைகளுடன் கூடியவர்கள்தான் அனைத்து மனிதர்களும்.
விருப்பம் போல் வாழ்க்கை:
நான் எனது 13 ஆவது வயதில்தான் நான் யார் என்பதை உணர்ந்தேன். இன்டர்நெட் எனக்கு உதவி செய்தது. ஆனால் அப்போது நான் எப்படிப்பட்டவராக உணர்ந்தேனோ அவ்வாறாக இருக்க முடியாமல் போனது. இப்போது நான் எனது விருப்பம் போல இருக்க முடிவு செய்து விட்டேன்.
பெயரும் மாற்றம்:
இது முழுமையான மாற்றம் இல்லை. ஒரு பரிணாம மாற்றம்தான். ஆண்டிரஜ் என்பது கிறிஸ்தவப் பெயர். அது ஆண் பெயரும் கூட. எனவேதான் எனது பெயரில் நான் கூடுதலாக a என்ற எழுத்தைச் சேர்த்துள்ளேன். இப்படி ஒரு பெயர் இருக்கிறாதா என்று எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் அவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications