தங்கம் விற்கிற விலைக்கு லண்டன் தெருக்களில் தங்க கார்களில் வலம் வரும் சவுதி பணக்காரர்
லண்டன்: லண்டன் தெருக்களில் சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரரின் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள் செல்வதை தான் மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர்.
சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளித்துள்ளார். அவர் தங்க முலாம் பூசப்பட்ட தனது 4 சொகுசு கார்களுடன் லண்டன் மாநகர தெருக்களில் வலம் வந்துள்ளார்.

அவர் லம்போர்கினி அவென்டடார், மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63, பென்ட்லி பிளையிங் ஸ்பர் மற்றும் ரோஸ் ராய்ஸ் ஆகிய நான்கு கார்களுக்கு தங்க முலாம் பூசியுள்ளார். ஒவ்வொரு காருக்கும் தங்க முலாம் பூச மட்டும் அவர் ரூ.4 லட்சம் செலவு செய்துள்ளாராம்.
லம்போர்கினியின் விலை ரூ. 3.3 கோடி, மெர்சிடீஸ் பென்ஸின் விலை ரூ.3.5 கோடி ஆகும். அவர் தனது கார்களை நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள ஜுமைரா கார்ல்டன் டவர் ஹோட்டல் வெளியே வரிசையாக நிறுத்தி வைத்துள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட சொகுசு கார்கள் வரிசையாக நிற்பதை பார்க்கும் இளசுகள் கார்களுடன் செல்ஃபி எடுக்க போட்டா போட்டி போட்டுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெரும்பணக்காரர்கள் கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் லண்டன் வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications