இந்த 'பிரா'வின் விலை ஜஸ்ட் ரூ. 61 கோடிதானாம்...!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: விக்டோரியா சீக்ரெட் தனது புதிய பேன்டசி பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பிராவை சாதாரணமாக பெண்கள் அணிந்து விட முடியாது.. காரணம், இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 1 கோடி டாலராகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ. 61.36 கோடியாகும்.

இந்தக் காஸ்ட்லியான பிராவை அணிந்த பெருமைக்குரியவராக பெருமிதம் பொங்கக் காணப்படுகிறார் சூப்பர் மாடல் அழகியான கேண்டிஸ் ஸ்வான்போயல்.

விக்டோரியாஸ் சீக்ரெட்டின் 2013 பேன்டசி பிரா வெளியீடு தொடர்பான பேஷன் ஷோவின் போது இந்த பிராவை அணிந்து காட்சியளித்தார் கேண்டிஸ்.

ரூபி.. வைரங்கள்.. சபையர்...

ரூபி.. வைரங்கள்.. சபையர்...

இந்த பிரா முழுவதும் ரூபி கற்கள், வைரக் கற்கள் மற்றும் சபையர் கற்களால் ஜொலி ஜொலிக்க வைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 4200 கிராம்...

மொத்தம் 4200 கிராம்...

மொத்தம் 4200 ரூபி, வைரம் மற்றும் சபையர் கற்கள் இந்த பிராவை அலங்கரிக்கின்றன.

கடந்த வருட பிராவை விட காஸ்ட்லி

கடந்த வருட பிராவை விட காஸ்ட்லி

கடந்த வருடம் விக்டோரியா இதேபோல ஒரு காஸ்ட்லியான பிராவை அறிமுகப்படுத்தியது. அதன் மதிப்பு 20.2 லட்சம் அமெரிக்க டாலராகும். அதை அலெசான்ட்ரா அம்ப்ரோசியா அணிந்து காட்சி தந்தார். தற்போதைய பிரா, அதை விட நான்கு மடங்கு அதிக விலை மதிப்பிலானது.

''ரொம்ப சிறப்பாக இருக்கிறது''

''ரொம்ப சிறப்பாக இருக்கிறது''

ரூ. 61 கோடி பிராவை அணிந்து காட்சி தந்த மாடல் அழகி கேண்டிஸ் அதுகுறித்துக் கூறுகையில், மிக மிகப் பெருமையாக இருக்கிறது. என்னை பெருமைப்படுத்தி விட்டது விக்டோரியா. ரொம்பக் கம்பீரமாக இருக்கிறது எனது அழகு என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+