தமிழக விவசாயிகள் படும் துயரங்களை அமெரிக்காவில் பேசவுள்ள மார்க்கண்டேய கட்ஜு!!

தமிழக விவசாயிகள் படும் துயரங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அமெரிக்காவில் பேசவுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

அட்லாண்டா: தமிழக விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அமெரிக்காவில் உரையாற்றவுள்ளார். அமெரிக்க தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் அவர் தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேச இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தலைநகரான சாக்ரெமெண்டோ, டெக்சாஸில் டல்லாஸ், ஜார்ஜியாவில் அட்லாண்டா என மூன்று முக்கிய நகரங்களில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மார்ச் 25, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய 3 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ளார். அதற்கான அழைப்பிதழையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

நானும் ஒரு தமிழன்

நானும் ஒரு தமிழன்

அதில் தமிழக விவசாயிகள் எதிர் நோக்கும் இன்னல்கள் பற்றி பேசப் போவதாக அவர் கூறியுள்ளார். அந்த தகவலுக்கு அடியில் 'நானும் ஒரு தமிழன்' என்று கையெழுத்து போடுவது போல் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 1, 2ஆம் தேதிகளில்

ஏப்ரல் 1, 2ஆம் தேதிகளில்

சாக்ரெமெண்டா பகுதியில் சனிக்கிழமை மாலை மூன்று மணி அளவில் மொசொனிக் செண்டரில் கட்ஜு உரையாற்றினார். டல்லாஸ் மாநகரத்தின் இர்விங், மகார்தர் பிலவுடில் அமைந்துள்ள ராதா கோவிந்தம் வளாகத்தில், சனிக்கிழமை ஏப்ரல் 1ம் தேதி அவருடைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கேள்வி பதில் நிகழ்ச்சியும் உண்டு

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறுநாள் , ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டா மாநகரில் ஜோன்ஸ் பிரிஜ் ரோட்டில் ல் உள்ள ஆச்சி உணவகத்தில் கட்ஜுவின் உரையுடன், கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சேவ் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அட்லாண்டா தமிழ் மக்கள் அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

மார்க்கண்டேய கட்ஜ் தமிழக விவசாயிகளுக்காக அமெரிக்க தமிழர்களிடம் நேரடியாக உரையாற்றி, கலந்துரையாடல் செய்ய இருப்பது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+