For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக துபாய் வந்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக திங்கிட்கிழமை துபாய் வந்துள்ளார். துபாய் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அமீரக அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Sushma Swaraj in Dubai

வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார். அவர் துபாய் மற்றும் அபுதாபியில் பல தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு உள்ளது.

2012-2013ம் ஆண்டில் ஆமீரகம் தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள்.

வளைகுடா பகுதி தான் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை பூர்த்தி செய்கிறது.

English summary
External affairs minister Sushma Swaraj reached Dubai on monday. She is touring in UAE for three days during which she meets top officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X