வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம் ! பாதுகாப்பு தீவிரம்
வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தற்காலிகமாக வெள்ளை மாளிகை மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ முதன்மை அலுவலகத்தின் 17-வது பென்சில்வேனியா அவென்யூ அருகே, உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3 அளவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாகி சூடு நடத்தியது யார் என்பதும், சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாகி சூடு நடைப்பெற்ற போது அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை துணை அதிபர் ஜோ பிடேன் மாளிகையில் இருந்துள்ளார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிக உயர்ந்த பாதுகாப்பு மிகுந்த வெள்ளை மாளிகை அருகே இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications