கரை ஒதுங்கிய பாகங்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையதா?: மழுப்பும் ஆஸ்திரேலியா
சிட்னி: மாயமான மலேசிய விமானத்தினுடைய பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் கரை ஒதுங்கிய 2 பாகங்களை ஆஸ்திரேலியாவில் வைத்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த 2014ம் ஆண்டு 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மொசாம்பிக்கில் கரை ஒதுங்கிய விமான பாகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிபுணர்கள் அந்த பாகங்களை ஆய்வு செய்து முடித்துள்ளனர். இதையடுத்து அந்த பாகங்கள் இந்த வாரம் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
மேலும் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கிடைத்த 2 பாகங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து விமானத்தை ஆஸ்திரேலியா தலைமையில் தேடும் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
தென்னாப்பிரிக்காவில் கிடைத்த 2 பாகங்களை ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பாகங்கள் மாயமான விமானத்தினுடையதா என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications