செல்போன் திருடிய வழக்கு... குற்றம் சாட்டப்பட்ட வாலிபர்களின் கைகளை வெட்டிய பாக். போலீசார்
லாகூர்: செல்போன் மற்றும் மின்சாரப் பொருட்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்ட திருடர்களின் கைகளைப் போலீசார் வெட்டியதாக பாதிக்கப் பட்ட குற்றவாளிகள் தெரிவித்துள்ள தகவலால் பாகிஸ்தான் போலீசார் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வெகாரி மாவட்டத்தின் மாண்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் குல்லாம் முஸ்தாப்பா(வயது 30), லியாகாட் அலி (வயது28). இவர்கள் இருவர் மீதும் செல்போன் மற்றும் மின்சாரப் பொருட்களைத் திருடியதாக வழக்கு தொடரப் பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் இடது கைகள் வெட்டப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று பஹாவால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், குற்றம் சாட்டப் பட்டவர்கள் தாங்களாகவே தங்கள் கைகளை வெட்டிக் கொண்டதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இவ்விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் உண்டானது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘திருடர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவரின் ஒருவரது கை மணிக்கட்டு பகுதியில் வெட்டப்பட்டிருந்தது. அவரது கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்தோம். இருவரும் சம்பவம் நடந்து சுமார் 10 மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் என்று மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் அவர்களது கையை வெட்டியுள்ளனர். ஆனால் திருடர்கள் தற்கொலை செய்து கொள்ள அவர்களாகவே கையை வெட்டி கொண்டனர் என போலீசார் கூறியுள்ளனர்' என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் போலீஸ் அதிகாரி சைதிக் அலி தோகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்தாப்பாவின் தந்தை, போலீசார் தங்களிடம் லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனைத் தர மறுத்ததால் இத்தகைய பாவத்தை அவர்கள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாகாண முதல்வர் தலையிட்டு, போலீஸ் விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் லியுறுத்தியுள்ளார்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications