செங்கல்லை எடுத்து முட்டையை உடைத்த சிறார்கள்.. இதயம் நொறுங்கி.. பரிதாபமாக செத்துப் போன அம்மா வாத்து!
போல்டன், இங்கிலாந்து: இங்கிலாந்தில் ஒரு பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சில போக்கிரிகள், தனது கண் முன்னாடியே தான் போட்ட முட்டைகளை செங்கல்லை எடுத்து அடித்து உடைத்ததால் அதிர்ச்சி அடைந்து மனம் உடைந்து போன அம்மா வாத்து அப்படியே மரணித்த சம்பவம் இங்கிலாந்தை உலுக்கியுள்ளது.
Recommended Video
உலகின் எல்லாப் பகுதியிலும் விலங்குகளை வதைக்கும் கொடூரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தின் மான்செஸ்டர், போல்டன் நகரில் கடந்த மாதம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெர்ஸ்லி என்ற இடத்தில் மான்செஸ்டர் கால்வாய் ஓடுகிறது. அந்த கால்வாயில் வாத்துகள் ஆனந்தமாக நீந்தி விளையாடுவது வழக்கம். அந்த இடத்திற்கு அருகிலேயே புதர்களில் முட்டை போட்டு குஞ்சு பொறிப்பதும் உண்டு. இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு சில டீன் ஏஜ் சிறார்கள் வந்துள்ளனர். அனைவருமே விஷமம் பிடித்தவர்கள் போல.

முட்டைகள்
அந்த இடத்தில் ஒரு புதரில் வாத்து முட்டைகள் இருப்பதைப் பார்த்து அதை எடுத்து விளையாடியுள்ளனர். அதைப் பார்த்த தாய் வாத்தும், தந்தை வாத்தும் வேகமாக வந்துள்ளன. தான் இட்ட முட்டைகளை சிறார்கள் எடுத்து விளையாடுவதைப் பார்த்த தாய்க்கு பெரும் சோகம் வந்துள்ளது. ஆனால் என்ன செய்ய முடியும் அந்த வாத்தால்.. வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. வேதனையுடன்.

முட்டையை உடைத்த சிறார்கள்
இந்த நிலையில் அந்த சிறார்கள் ஒரு கொடூரத்தை அரங்கேற்றினர். பெரிய செங்கல்லை எடுத்து வந்து அந்த முட்டையை அடித்துள்ளனர். இதில் முட்டை சிதறிப் போய் விட்டது. இதைப் பார்த்த தாய் வாத்து அதிர்ச்சியில் கண்ணீர் விட்டுள்ளது. உடைந்து போன முட்டையை சுற்றிச் சுற்றி வந்துள்ளது. தந்தை வாத்தோ அங்கிருந்து ஓடிப் போய் விட்டது.

மிச்சமிருந்த முட்டை
ஆனால் தன் முன்னாலேயே தனது கருவை சிதைத்து விட்டுப் போன சிறார்களின் செயலால் வேதனையில் வெம்பிப் போன தாய் வாத்து அப்படியே அதிர்ச்சி அடைந்து இறந்து போய் விட்டது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாத்து போடும் முட்டைகள் ஆரோக்கியமாக குஞ்சு பொறிக்கிறதா என்பதை வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். சில முட்டைகள் சரிவர குஞ்சு பொறிக்காமல் போய் விட்டன. ஒன்று மட்டும்தான் மிச்சமிருந்தது. அதையும் இந்த போக்கிரிப் பசங்க உடைத்து விட்டனர்.

சென்சிட்டிவான வாத்து
காணாமல் போன தந்தை வாத்து மன நிலை பாதித்து மன அழுத்தத்தால் வேறு எங்காவது போயிருக்கலாம் என்று வனத்துறையினர் சொல்கின்றனர். வாத்துகள் மிகவும் சென்சிட்டிவானவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த தாய் வாத்து மனம் உடைந்து போயிருக்கும். தனது கரு சிதைக்கப்பட்டு விட்டது. துணையும் போய் விட்டதால் நிச்சயம் அது இதயம் வெடித்துப் போய் மரணித்திருக்கும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications