தினமும் 6 மணி நேரம்! ஸ்வீடனில் ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்’ போட்டி? ரூல்ஸை பார்த்தா அசந்துபோவீங்க!
ஸ்வீடன்: வித்தியாசமான ரூல்ஸ்களுடன் ஸ்வீடன் நாட்டில் உடலுறவை ‛செக்ஸ்' போட்டியாக அங்கீகரிக்கவும், வரும் 8ம் தேதி முதல்‛செக்ஸ் சாம்பியன் ஷிப்' போட்டி நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. அங்குள்ள கலாசாரத்துக்கும் இந்திய கலாசாரத்துக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது.
இந்நிலையில் தான் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக உள்ள ஸ்வீடன் வித்தியாசமான போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது உடலுறவை மையப்படுத்தி ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்' போட்டியை நடத்த இருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

மாறுபட்ட நிலை: இந்தியாவில் இன்றும் கூட பாலியல் உறவு சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசுவது இல்லை. தொலைக்காட்சிகளில் கூட பாலியல் உறவு சார்ந்த பிரச்சனைகளுக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவில் தான் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படியான சூழல் இல்லை. அங்கு முற்றிலும் மாறுபட்ட நிலை உள்ளது.
செக்ஸ் சாம்பியன் ஷிப்: அந்த வகையில் தான் ஸ்வீடன் நாடு தற்போது ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்' போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது நடந்தால் செக்ஸை ஒரு விளையாட்டு போட்டியாக நடத்தும் முதல் நாடு என்ற பெயரை ஸ்வீடன் பெறும். மேலும் போட்டியை வரும் 8 ம் தேதி தொடங்கவும் வாய்ப்புள்ளது. உள்ளது. என்னடா இது ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்' என நீங்கள் நினைக்கும் அதே சமயத்தில் இந்த போட்டியின் விதிகள், நடத்தப்படும் விதத்தை கேட்டால் இன்னும் கூட ஆச்சரியப்படுவார்கள்.

பார்வையாளர்கள்: அதாவது ‛செக்ஸ் சாம்பியன் ஷிப்' போட்டிக்கு பார்வையாளர்கள், நடுவர்கள் இருப்பார்களாம். இன்னும் சொல்லப்போனால் பார்வையாளர்கள், நடுவர்கள் இந்த போட்டியை நேரில் பார்ப்பார்கள். இதற்காக ஐந்து பர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படுகிறது. மேலும் செக்ஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்போருக்கு அவர்களின் செயல்பாடுகளை பொறுத்து பார்வையாளர்கள் 70 சதவீத மதிப்பெண்ணையும், நடுவர்கள் 30 சதவீத மதிப்பெண்ணையும் வழங்குவார்கள். இதில் எந்த ஜோடி அதிக மதிப்பெண் பெறுகிறதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
6 வாரம் போட்டி: இந்த போட்டி மூன்று நிலைகளாக நடக்கும். ஒவ்வொரு நிலைகளிலும் போட்டியாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச புள்ளிகளை பெற வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்த சுற்றுகளில் பங்கேற்க முடியும். வரும் 8 ம் தேதி தொடங்கும் இந்த போட்டி 6 வாரங்கள் வரை தொடர்ந்து நடக்கும். இந்த காலத்தில் துணையை ஈர்த்தல், மசாஜ் செய்தல், ஓரல் செக்ஸ், உடலுறவு, சகிப்புத்தன்மை, போட்டோவுக்கு போஸ் கொடுத்தல் உள்பட 16 பிரிவுகளில் போட்டியானது நடத்தப்பட உள்ளது.

தினமும் 6 மணிநேரம்: மேலும் ஒவ்வொரு போட்டி நாளும் ஜோடிகள் 6 மணிநேரம் வரை ‛செக்ஸ் சாம்பியன்ஷிப்' போட்டி அமர்வுகளில் பங்கேற்க வேண்டி இருக்கும். தனிப்பட்ட உறவு என்றால் 45 நிமிடங்கள் முதல் ஒருமணிநேரம் வரை பாலியல் உறவு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டி இருக்கும்.
தவிர்க்க முடியாது: இதுபற்றி ஸ்வீஷ் பெடரேஷன் ஆப் செக்ஸ் எனும் அமைப்பின் தலைவர் டிராகன் பிராட்டிச் கூறுகையில், ‛‛செக்ஸ் உறவு என்பது ஒருவரின் உடல் மற்றும் மனஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் பிற விளையாட்டுகளை போல் செக்ஸ் உறவையும் விளையாட்டாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்த போட்டியின் வெற்றியாளர்களின் தேர்வு என்பது தங்களது ஜோடியை திருப்திப்படுத்துவது மற்றும் மகிழ்ச்சியடைய செய்வது உள்ளிட்ட அம்சங்களையே அடிப்படையாக கொண்டிருக்கும். '' என்றார். இருப்பினும் தற்போது வரை ஸ்வீஸ் பெடரேஷன் ஆப் செக்ஸ் அமைப்பின் கோரிக்கைக்கு அந்நாடு அனுமதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போட்டி நடப்பதில் சிக்கல் உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications