6 மணி நேரம் வேலை பார்த்தா போதும்.. ஊழியர்களின் 'பிரஷரை'க் குறைக்கும் ஸ்வீடன்!
கோதன்பர்க்: உடல் மற்றும் மன அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் அரசு ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு ஸ்வீடனில் வேலை நேரம் ஆறு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
எட்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வதால் ஊழியர்கள் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. இதனை உறுதி செய்வது போல சுவீடனில் பல ஊழியர்கள் அடிக்கடி உடல் நலக் கோளாறு காரணமாக விடுப்பு எடுக்க ஆரம்பித்தனர்.
எனவே, ஊழியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் புதிய வேலை நேரத்திட்டத்தை சுவீடம் அறிமுகப் படுத்தியுள்ளது.

மேயர் அமல்படுத்திய புதுத்திட்டம்...
சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் நகரின் மேயர் தான் இந்த ஆறுமணி நேரம் வேலை என்ற புதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
முழு சம்பளம்...
இத்திட்டத்தின் மூலம் 6 மணி நேரம் வேலை பார்த்தாலே ஒரு நாள் வேலை பார்த்ததாக கணக்கில் கொள்ளப்படும். முழுநாள் சம்பளமும் வழங்கப் படும் எனத் தெரிவித்துள்ளார் மேயர் மேட்ஸ் பில்கம்.
முதல்கட்டமாக இரண்டு துறைகளில்...
முதல்கட்டமாக இத்திட்டம் இரண்டு துறைகளில் மட்டும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இந்த இருதுறைகளில் கிடைக்கும் ரிசல்ட்டை பொருத்து நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புத்துணர்ச்சியுடன் வேலை...
இந்த புதிய வேலை நேர மாற்றத்தினால் ஊழியர்களின் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
எங்களுக்கும் ஆதாயம் தான்...
மேலும், இதன் மூலம் ஊழியர்களின் விடுமுறைகள் குறையும் என்றும், வேலையும் சுறுசுறுப்பாக நடக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications