பெண்களின் நீச்சல் உடையில் விநாயகர் படம்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்
கலிபோர்னியா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவம், பெண்கள் அணியும் நீச்சல் உடை மற்றும் வாட்டர் போலோ உடைகளில் விநாயகர் படத்தை பொறித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. விநாயகர் சதுர்த்திக்காகப் பலரும் பல விதமான விநாயகர் உருவச் சிலைகளை வடிவமைத்து வணங்கத் தயாராகி வரும் நிலையில், பெண்களின் நீச்சல் உடையில் விநாயகர் உருவம் பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளது அந்த அமெரிக்க நிறுவனம்.

இந்த நீச்சல் உடை விற்பனையை அந்த நிறுவனம் உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, இந்து அமைப்பினர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரபஞ்ச இந்து சமுதாய அமைப்பின தலைவர் ராஜன் ஜெட் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
வாட்டர் போலோ மற்றும் நீச்சல் உடைகளில் கணேச பெருமானின் உருவம் பொறித்திருப்பது வேதனைக்குரியது. வணக்கத்திற்குரிய இந்து கடவுளின் உருவத்தை பெண்களின் உடைகளில் பொறித்து விற்பது மிகவும் தவறு.
இந்த நிறுவனம் உடனடியாக இத்தகைய உடைகளை தயாரிப்பதை நிறுத்துவதோடு, விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆடைகளையும் திரும்ப பெற வேண்டாம். இந்து மக்களிடம் அந்த நிறுவனம் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications