துபாயில் தொழிலாளர்களுக்கு நடைபெற்ற நீச்சல் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: தொழிலாளர் தினத்தையொட்டி கடந்த 1ம் தேதி துபாயில் நீச்சல் போட்டி நடைபெற்றது.
துபாய் பிரைம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பில் தொழிலாளர் தினத்தையொட்டி கடந்த 1ம் தேதி நீச்சல் போட்டி எகிப்தியன் கிளப்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஈடிஏ அஸ்கான் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கு மொபைல் போன், டேப்லெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொழிலாளர் தினத்தன்று நடந்த நீச்சல் போட்டி தொழிலாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.












Click it and Unblock the Notifications