Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கையில் கோடாரி.. இன்னொரு கையில் கத்தி.. ரயிலை கடத்திய இளைஞர்.. உறைந்த பயணிகள்.. அடுத்து திக்திக்

Subscribe to Oneindia Tamil

பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகளுடன் ரயில் திடீரென கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தை கடத்துவது, ரயிலைக் கடத்துவது போன்ற சம்பவங்களை நாம் சினிமாவில் தான் பார்த்து இருப்போம். உள்ளே புகுந்து பயணிகளைப் பணைய கைதிகளாக வைத்து மிரட்டும் காட்சிகளைப் பார்த்தாலே திக்திக் என இருக்கும்.

Switzerland train Hostage Crisis ends as suspect with axe killed by Police

ஆனால், இப்படியொரு சம்பவம் தான் இப்போது ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நீட்டித்த இந்த சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

ரயில் கடத்தல்: இதற்கிடையே நேற்று வியாழன் இரவு சுவிட்சர்லாந்தின் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலைக் கடத்திய அந்த நபர் கோடாரி மற்றும் கத்தியை ஆயுதமாக வைத்துள்ளார். மேலும் அவர் ஃபார்ஸி மற்றும் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் தனது தேவைகளை போலீசாருக்கு கூறி மிரட்டியுள்ளார். போலீசார் ஆரம்பத்தில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இருப்பினும், ஒரு கட்டத்தில் ரயில் உள்ளே அதிரடியாக நுழைந்த போலீசார் அந்த கடத்தல்காரரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து பணைய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் ரயிலின் உள்ளே புகுந்த போது அவர்களைத் தாக்கக் கோடாரியுடன் அந்த நபர் பாய்ந்ததாகவும் இதனால் வெறு வழியில்லாமல் சுட்டுக் கொன்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் தகவல்: இந்தக் கடத்தலில் ஈடுபட்ட அவர் யார்... அவர் எதற்காகச் செய்தார் என்பது குறித்த தகவல்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.. அந்த நபர் மொத்தம் 14 பயணிகள் மற்றும் நடத்துநர் என மொத்தம் 15 பேரைக் கடத்தி இருந்தார். மாலை 6.35 மணிக்கு இந்த கடத்தல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், சுமார் 4 மணி நேரம் கழித்து இரவு 10.30 மணிக்குப் பணைய கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

யவெர்டன் என்ற இடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயிலை இந்த நபர் கடத்தியுள்ளார். நடத்துநரை முதலில் மிரட்டிய அந்த நபர், அடுத்து பயணிகளையும் பிடித்து வைத்துள்ளார். ரயிலின் நடத்துநரே கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் முதலில் வாட்ஸ்அப் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான ஃபார்சி மொழியில் பேசியதாகவும் அதன் பிறகு ஆங்கிலத்திலும் கொஞ்சம் பேசியதாகக் கூறப்படுகிறது.

4 மணி நேரம்: பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரமாகத் தொடர்ந்த நிலையில், இறுதியில் ரயிலில் அதிரடியாக நுழைந்து பணய கைதிகளை மீட்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி இரவு 10.30 மணியளவில் அதிரடியாக நுழைந்து மீட்கவும் செய்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை பொறுத்தவரைக் கடத்தல் சம்பவங்கள் அரிதானது. கடந்த 2022 ஜனவரியில், விலைமதிப்பற்ற பொருட்கள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை அணுகத் தம்பதி ஒருவரையும் ஒரு நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களையும் குற்றவாளிகள் கடத்தினர். இருப்பினும், தங்கள் திட்டம் நிறைவேறாது என்பதைத் தெரிந்து கொண்ட அவர்கள் கொள்ளை அடிக்காமலேயே ஒட்டம் பிடித்தனர்.

அதேபோல கடந்த 2021 நவம்பரில், பிரபல வாட்ச் நிறுவனத்தின் இயக்குநர் குடும்பத்துடன் கடத்தப்பட்டனர். அவரிடம் இருந்த தங்கத்தைத் திருடிய கடத்தல்காரர்கள் அவரை அண்டை நாடான பிரான்சுக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+