இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை... ஐநா. அறிக்கை விவாதத்தின் போது சுவிஸ் வலியுறுத்தல்
ஜெனிவா : இறுதிப் போரின் போது, இலங்கை போர்க்குற்றம் குறித்து உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வேதேச விசாரணை நடத்தவேண்டும் என சுவிட்சர்லாந்து மற்றும் யூனிசெப், மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.

அதில், போர்க்குற்றம் குறித்து சர்வதேச மற்றும், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது. ஆனால், இலங்கை அரசோ, உள்நாட்டு விசாரணைதான் நடத்தப்படும் என கூறி வருகிறது.
இந்நிலையில் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.-வின் அறிக்கை மீது பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, "இலங்கை மற்றும் விடுதலைப் புலிகள் போர்க் குற்றத்தில் ஈடுப்பட்டது வருத்தம் அளிக்கிறது. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
சர்வேதேச விசாரணை வேண்டும், போரின்போது காணாமல் போன குழந்தைகள் இதுவரை கிடைக்கவில்லை என்று சில மனித உரிமை அமைப்புகளும், யுனிசெப் அமைப்பும் தெரிவித்துள்ளன. இதே போன்று, இலங்கை பிரச்சனையை தீர்க்க சர்வதேச நாடுகளின் உதவி தேவை என்ற கருத்தையே வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications