நேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்!
சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் துருக்கி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Recommended Video
டமாஸ்கஸ்: சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் துருக்கி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் தற்போது தீவிரமாக போர் நடந்து வருகிறது. ஆனால் இந்த போர் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான போர் கிடையாது. இது துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு இடையிலான போர் ஆகும்.
சிரியாவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்க ராணுவமும், குர்து படைகளும் சேர்ந்துதான் சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போராடி வந்தது.

என்ன போர்
அமெரிக்க படைகள் வெளியேறியதால் குர்து படைகள் தனித்து விடப்பட்டது. குர்து படைகளை பல வருடங்களாக எப்போது காலி செய்யலாம் என்று துருக்கி திட்டமிட்டு வந்தது. அதற்கு அல்வா போல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் டிரம்ப். இதை தற்போது துருக்கி பயன்படுத்த தொடங்கி உள்ளது.

என்ன மோசம்
இதனால் தற்போது துருக்கி சிரியாவில் உள்ள குர்து படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது ஐஎஸ் அமைப்பிற்கும் ஒரு வகையில் சாதகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லை
ஆனால் இது தொடர்பாக அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக எதுவும் பேசாமல் இருந்தது. அமெரிக்கா தனது படையை வாபஸ் வாங்கியதுதான் இந்த சண்டைக்கு காரணம். ஆனாலும் சண்டையை உருவாக்கிவிட்டு, அமெரிக்கா அமைதி காத்து வந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

சிரியா நிலை
சிரியாவில் துருக்கி படை தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா உடனடியாக தலையிடும் என்று டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் 1 லட்சம் மக்கள் இரண்டு நாளில் இடம்பெயர்ந்தும் கூட அமெரிக்கா எதுவும் பேசாமல் இருந்தது. இதனால் சிரியாவில் உள்ள குர்து படைகள் மொத்தமாக அழிய போகிறது என்று எல்லோரும் நினைத்தார்கள்.

குர்து நிலை
ஆனால் தற்போது புதிய திருப்பமாக குர்து படைகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் துருக்கி மீது மோசமான நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேட்டோ படை
இது தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளது. நேட்டோ படைகளை அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதையும் செய்ய தயார். துருக்கி உடனடியாக சிரியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா இதன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications