ஒபாமாவின் டுவிட்டர் , பேஸ்புக் இணைப்புகளை முடக்கிய சிரியா அதிபரின் ஆதரவாளர்கள்
வாஷிங்டன்: நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களை சில மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர் சிரிய அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள். இதனால், இந்த பக்கங்களை பார்வையிடுவதற்காக இணைப்புகளை கிளிக் செய்த நபர்கள், சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணைய இணைப்புக்கு திசை திருப்பப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியானார்கள். இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, சிரியா மீது போர் தொடுக்க இருப்பதாக அறிவித்தது. பின்னர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் சமரசப் பேச்சால் போர் முடிவை மாற்றிக் கொண்டது அமெரிக்கா.

முடக்கம்....
இந்நிலையில் நேற்று சில மணி நேரங்கள் அதிபர் ஒபாமாவின் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை முடக்கப்பட்டது.

சிரிய மின்னணு ராணுவம்...
அச்சமயத்தில் ஒபாமாவின் சமூக வலைத் தளப் பக்கங்களுக்குச் சென்ற நபர்கள், அவர்கள் சிரியாவின் மின்னணு ராணுவம் என்ற இணையதளத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நன்றி....
அதில், 'உங்கள் நுழைகைக்கு நன்றி! ஒபாமாவின் அபாயகரமான பிரச்சார இணைப்புகளை நாங்கள் முடக்கியுள்ளோம்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உண்மைதான்...
சில மணி நேரங்களுக்கு இந்த இணைப்புகள் முடக்கப்பட்டது உண்மைதான் என வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

புனரமைப்பு பணிகள்...
விஷமிகள் சிலர் அதிபரின் இணைப்புகளை முடக்கியுள்ளனர். எனினும், இவற்றை நிர்வகிக்கும் கட்டுப்பாடு அவர்களின் கைகளுக்கு போகவில்லை. முடக்கப்பட்ட இணைப்புகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதற்கு முன்னர்...
அமெரிக்காவின் பிரபல நாளிதழ்களான நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கடற்படை வீரர்கள் தேர்வு மையம் ஆகியவற்றின் இணையதளங்களையும் இவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications