உடலுறவுக்கு சம்மதித்தால்தான் சாப்பாடு.. சிரியா பெண்களை கொடுமை செய்த ஐநா அனுப்பிய உதவிக்குழு?
சிரியாவில் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஐநா அனுப்பிய குழுவை சேர்ந்தவர்கள் இந்த செயலை செய்துள்ளார்கள்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

5 மணி நேரம்
தற்போது அங்கு தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் ஐநா அனுப்பி இருக்கும் உதவிக் குழு அங்கே சென்று உதவிகள் செய்யும். மருத்துவ குழு, உணவு குழு என நிறைய உதவி குழுக்கள் ஐநா மூலம் அங்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

உடலுறவு வைத்தால் மட்டுமே
அதன்படி சிரியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் போது இந்த கொடுமை நடக்கிறது. அவர்களிடம் உடலுறவு கொண்டால் மட்டுமே, மருத்துவ உதவி உணவு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஐநா மூலம் சென்ற பல அதிகாரிகள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

செல்லமாட்டார்கள்
இதனால் உதவிகள் கொடுக்கப்படும் இடத்திற்கு பெண்கள் செல்வது இல்லை. அங்கு சென்று உதவிகளை பெற்று திரும்பினால், உடலுறவு வைத்துக் கொண்டதாக நினைப்பார்கள் என்று செல்வதை தவிர்க்கிறார்கள். இதன் காரணமாகவே பலர் இன்னும் மருத்துவ உதவியும், உணவும் பெறாமல் இருக்கிறார்கள்.

தற்காலிக திருமணம்
அதுமட்டும் இல்லாமல் அங்கு வந்து இருக்கும் உதவிப்படை அதிகாரிகள், சில பெண்களை திருமணமும் செய்கிறார்கள். ஆனால் இது தற்காலிக திருமணம் மட்டுமே. அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்கவேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அழைத்து செல்வார்கள்
மேலும் அங்கு வரும் இந்த உதவி செய்யும் பணியாளர்கள் பெண்களை பைக், காரில் வைத்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். பல நாட்களை தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வீட்டில் அந்த பெண்களை வேலை செய்ய வைக்கிறார்கள். அதேபோல் பாலியல் விருப்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

யார்?
ஐநா அனுப்பி இருக்கும் உதவிக்குழுவில் உள்ள ஆண்கள்தான் இந்த செயலை செய்வது. ஆனால் ஐநா அமைப்பு இதை மறுத்துள்ளது. ஐநாவுடன் ஒப்பந்தம் செய்து இருக்கும் குழுக்களை சேர்ந்த ஆண்கள் அவர்கள் என்று விளக்கம் அளித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே
இந்த பிரச்சனை 2015ல் இருந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடலுறவு செய்தால்தான் உணவு என்று அப்போதே உதவிக்குழு பணியாளர்கள் பெண்களை வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் பட்டினியில் கிடந்தும் இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications