இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. 1992 மாடல் நடக்குமா? இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரிட்சை
கான்பெரா: உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சூப்பர் 12 சுற்றுகள் மற்றும் அரையிறுதி சுற்றுகள் நிறைவடைந்து இருக்கின்றன.
சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற 12 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே தலா ஒரு போட்டி நடத்தப்பட்டது.

அரையிறுதி சுற்று
பிரிக்கப்பட்ட 2 குழுக்களில் கூடுதலான புள்ளிகளை எடுத்த முதல் 2 அணிகள் என 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் குரூப் ஒன்றில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் இரண்டில் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இறுதிப்போட்டிக்கு தகுதி
முதலாவது அரையிறுதி போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.

இந்தியா அதிர்ச்சி தோல்வி
இந்திய அணியை இங்கிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இன்று இறுதிப்போட்டி
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய அணிகள் முன்னேறி உள்ளன. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றிபெறும் அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும்.

1992 மாடல்
நடைபெற்று வரும் இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரைபோல் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். 1992 ஆம் ஆண்டும் இதே ஆஸ்திரேலியா மண்ணில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதின.

ரசிகர்கள் ஒப்பீடு
அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று உலகக்கோப்பையை கைப்பற்றிய நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications