துபாய் லாட்டரியில் இந்தியருக்கு சொகுசு கார்கள்- 17 லட்சம் பரிசு
துபாய்: கேரளாவைச் சேர்ந்த டெய்லர் ஒருவருக்கு துபாய் லாட்டரியில் பல லட்சம் ரூபாய் பணமும், சொகுசுக் கார்களும் பரிசாகக் கிடைத்துள்ளன.
உலகின் செல்வ வளமை மிகுந்த நாடுகளில் ஒன்றான துபாயில் 'இன்ஃபினிட்டி ஷாப்பிங் ஃபெஸ்ட்டிவல்-2014' என்ற பெயரில் வர்த்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
இங்கு வரும் பார்வையாளர்கள் நாள்தோறும் இந்த வர்த்தக திருவிழாவில் விற்கப்படும் லாட்டரி டிக்கெட்டுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
10 ஆண்டுகளாக துபாயில் டெய்லராக வேலை செய்துவரும் இந்தியரான ஃபசலுதீன் குட்டிபாலக்கல்(33) என்பவருக்கு இரண்டாம் நாள் நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசு கிடைத்துள்ளது. ‘இன்ஃபினிட்டி' நிறுவனத்தின் 2 அதிநவீன சொகுசு கார்களுடன் 1 லட்சம் திர்ஹம் ரொக்கமும் இவருக்கு பரிசாக கிடைத்துள்ளன.
பல லட்சம் பரிசாகக் கிடைத்தது பற்றி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள குட்டிபாலக்கல் கூறியதாவது:
10 ஆண்டுகளாகவே எனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து இந்த வர்த்தக திருவிழாவில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். இந்த ஆண்டு நான் மட்டும் தனியாக ஒரு சீட்டு வாங்கினேன். இந்த ஆண்டு எப்படியும் எனக்கு பரிசு கிடைத்து விடும் என்று எனது உள்ளுணர்வு கூறியது.
அதேபோல், இம்முறை எனக்கு முதல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு தான் என் மனைவிக்கு பிரசவம் நடந்தது. இந்த குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் தான் எனக்கு பரிசு மழையாக பொழிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
பரிசு பணத்தில் ஒரு பகுதியை நண்பர்களுக்கும், கேரளாவில் உள்ள உறவினர்களுக்கும் கொடுத்து விடுவேன். மீதி பணத்தை வைத்து கேரளாவில் உள்ள எனது வீட்டை பெரியதாக்கி கட்டுவேன். ஆனால், இந்த 2 சொகுசு கார்களையும் என்ன செய்வது என்பது தான் புரியவில்லை
என்கிறார் குட்டி பாலக்கல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications