குழந்தை பிறந்தால் ரூ.3 லட்சம் பரிசு.. அறிவித்த இந்தியாவின் ‛கூட்டாளி’.. யாருனு பாருங்க
தைவான்: நம் நாட்டி அருகே தைவான் உள்ளது. தைவானை சீனா தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. தங்களின் நாட்டின் ஒரு பகுதியாக தான் சீனா, தைவானை கருதி வருகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் தைவான் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ரூ.3 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை குழந்தை பிறந்தால் ரூ.6 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
சீனாவின் ஒரு பகுதியாக தைவான் இருந்தது. தற்போது தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சீனா இன்னும் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

‛‛தைவான் தனி நாடு அல்ல. அது சீனாவின் ஒரு பகுதி தான்‛‛ என்று சீனா தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அவ்வப்போது போர் மேகங்களும் இருநாடுகளின் எல்லையில் சூழ்ந்து வருகிறது.
அதேபோல் நம் நாடும் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் தூதரக உறவை தனியாக வைத்து சீனாவுக்கு அப்பாற்பட்டு தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. இருநாடுகள் இடையே வர்த்தக உறவு உள்ளது. சீனாவிடம் இருந்து பிரிந்ததால் தைவான் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது.
2024ம் ஆண்டு நிலவரப்படி அந்த நாட்டின் மக்கள்தொகை 2.50 கோடியாக உள்ளது. இதனால் அங்கு குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இரட்டை குழந்தை குழந்தை பெற்றெடுத்தால் ரூ.2 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த பரிசு தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு ரூ.2.92 லட்சமும், இரட்டை குழந்தை பிறந்தால் அந்த தம்பதிக்கு ரூ.6.16 லட்சமும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications