தைவானுக்கு சப்போர்ட் பண்ணது இதுக்குதானா? அமெரிக்கா ஆடிய டபுள் கேம்.. இதுக்கு சீனாவே பரவாயில்லை!
தைபே: தைவான் நாட்டை சீனாவிடமிருந்து காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு அந்நாட்டிற்குள் நுழைந்த அமெரிக்கா, தற்போது தைவானிடமிருந்து செமிகண்டக்டர் உற்பத்தியை 50-50 கேட்கிறது. இதனால் தைவான் அதிர்ச்சியைடந்திருக்கிறது.
உலகம் முழுவதும் தொழில்நுட்பதுறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்நிலையில், செமிகண்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. என்னதான் அமெரிக்க செமிகண்டக்டர் உற்பத்தியை அதிக அளவுக்கு செய்தாலும், ஆசிய சந்தைக்கு செமிகண்டக்டர்களை தனியாக உற்பத்தி செய்ய பொருத்தமான இடத்தை தேடி வந்தது. தைவான் விஷயத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க இருப்பதால், தைவானை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறது.

எனவே, அமெரிக்க வணிகச் செயலர் ஹோவர்ட் லட்னிக் தைவானிடம் இருக்கும் செமிகண்டக்டர் உற்பதியை பாதி பாதியாக பிரித்துக்கொள்ளலாம் என்று கேட்டிருக்கிறார். ஆனால், தைவானின் தலைமைத் தீர்வைத் திட்ட அதிகாரி செங் லி-ச்சியுன் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. "இது அமெரிக்காவின் யோசனை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 50-50 சதவீதப் பங்கீட்டிற்கான உறுதிமொழியை எங்கள் பேச்சுவார்த்தைக் குழு ஒருபோதும் அளிக்கவில்லை. அத்தகைய நிபந்தனைக்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா தைவானுக்கும் வரியை போட்டிருக்கிறது. 20% வரியை எதிர்கொண்டிருக்கும் தைவான், வரியை நீக்கி வணிகத்தை சீராக வைத்துக்கொள்ள தீவிரமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது. ஆனால், அமெரிக்கா தைவானின் அடிமடியில் கை வைக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்திருப்பது, அமெரிக்காவுடனான தைவானின் வர்த்தக உபரியை அதிகரித்துள்ளது. இது டிரம்பின் கவனத்தை ஈர்த்துள்ளது. தைவானின் அமெரிக்க ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் மேல் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்ததாக உள்ளது, இதில் செமிகண்டக்டர்களும் அடங்கும்.
இந்த வர்த்தகம் பாதிக்கப்பட கூடாது எனில், தைவான் அமெரிக்காவில் முதலீடுகளை அதிகரிக்கவும், அதன் எரிசக்தி தேவைகளை அங்கிருந்து பூர்த்தி செய்யவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% க்கும் மேல் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு தைவான் ஏன் முக்கியம்?
உலக அளவில் மொத்த செமிகண்டக்டர் உற்பத்தியில் தைவான் 60-70% பங்களிப்பை செய்கிறது. மிக முக்கியமாக, ஸ்மார்ட்போன்கள், அதிநவீன கம்ப்யூட்டர்கள், செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஆகியவற்றிக்கு தேவையான செமிகண்டக்டர்களை தைவான் 90% வரை உற்பத்தி செய்கிறது. தைவான் செமிகண்டக்டர் மேனுஃபேக்சரிங் கம்பெனிதான் இந்த வெற்றிக்கு காரணம். இது உலகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையாக இருக்கிறது. இதனை கைப்பற்றினால் ஆசியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை தொடங்கி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்பது அமெரிக்காவின் திட்டம்.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications