எதிர்க்கட்சி எம்பிக்களின் பதவி பறிப்பு.. தைவான் அரசியலில் திடீர் மாற்றம்! சீனாவுக்கு சிக்கல்!
தைபே: தைவான் அதிபராக உள்ள லாய் சிங்டேவுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவியை அந்நாட்டு மக்களே பறித்து வருகின்றனர். இது சீனாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தைவானுக்கு என தனி எதிர்காலத்தை உருவாக்குவதுதான் தற்போதைய அதிபர் லாய் சிங்டேவின் திட்டம். ஆனால் அவருடைய DPP கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. எனவே எதிர்க்கட்சி எம்பிக்களின் பதவியை மக்கள் 'திரும்பப் பெறும் வாக்கு' மூலம் பறித்து வருகின்றனர்.

தைவானில் எதிர்க்கட்சியாக 'KMT' எனும் கட்சி இருக்கிறது. இக்கட்சி, சீனாவுடன் ஒன்றிணைந்து தைவான் நாட்டை பயணிக்க வைக்க வேண்டும் என்று கோரி வருகிறது. இப்படி இருக்கையில்தான் இக்கட்சியின் எம்பிக்கள் 'திரும்பப் பெறும் வாக்கு' மூலம் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
'திரும்பப் பெறும் வாக்கு' என்றால் என்ன?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்ய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சில நாடுகளில் தைவானும் ஒன்று. அதாவது தாங்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்கள் சரியாக செயல்படவில்லை எனில், உடனடியாக அவர்களை பதவியிலிருந்து நீக்க முடியம். இதற்கு பெரும்பாலான மக்கள் கையெழுத்திட வேண்டும். அப்படி செய்தால் மீண்டும் தேர்தல் நடக்கும். இதைத்தான் 'திரும்பப் பெறும் வாக்கு' என்று கூறுகிறார்கள்.
இந்த வார இறுதியில் எதிர்க்கட்சியான KMT கட்சியை சேர்ந்த இரண்டு எம்பிக்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கின்றனர். இக்கட்சியை சேர்ந்த மேலும் 7 எம்பிக்கள் அடுத்த மாதம் இந்த நெருக்கடியை எதிர்கொள்வார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், KMT கட்சியின் ஆட்சியில்தான் இந்த 'திரும்பப் பெறும் வாக்கு' எனும் நடைமுறையே கொண்டுவரப்பட்டது. நம்மூரில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சட்டத்தை வைத்து, தற்போது ஆளும் கட்சி அவர்களை கட்டம் கட்டுவதை போலவே தைவானிலும் நடந்து வருகிறது.
இது குறித்து KMT கட்சியின் எம்பி, லாய் ஷி-பாவோ கூறுகையில், "இது வெறுப்பால் தூண்டப்பட்டிருக்கிறது. குறிவைக்கப்படும் எம்பிக்கள், அரக்கர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்" என்று ஒரு நேர்காணலில் தெரிவித்தார். மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனில் தேவையான அளவுக்கு மக்கள் இது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எனவே KMT கட்சியும் தங்கள் எம்பிக்களை காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சிக்கு எதிராக இதை முன்னெடுத்திருந்தது. ஆனால் அக்கட்சியால் போதுமான அளவுக்கு மக்கள் ஆதரவை பெற முடியவில்லை.
தைவானிய தேர்தல் சட்டத்தின்படி, பதவி நீக்க வாக்கெடுப்பு வெற்றி பெற, அதற்கு எதிராக வாக்களிப்பதை விட அதிகமான வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட வேண்டும். மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் குறைந்தபட்சம் கால் பங்காவது எம்பியை நீக்க வாக்களிக்க வேண்டும். ஒரு எம்பி பதவி நீக்கம் செய்யப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்பி மீண்டும் போட்டியிட முடியாது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கணிசமான எண்ணிக்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்டால், சீனாவின் பொருளாதாரத்தை மேலும் மாற்றுவது உட்பட, தற்போதைய அதிபர் தனது கட்சியின் திட்டங்களை நிறைவேற்றுவது எளிதாகும். மேலும், தைவானின் உயர் நீதிமன்றத்திற்கு அவர் விரும்பும் நீதிபதிகளை நியமிக்க முடியும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தைவானில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போது அதிபராக இருக்கும் லாய் வெற்றி பெற்றார். ஆனால், எதிர்க்கட்சியான KMT 113 இடங்களில் 52 எம்பிக்களை கைப்பற்றியது. சிறிய எதிர்க்கட்சியான தைவான் மக்கள் கட்சியின் ஆதரவுடன், KMT எம்பிக்கள், அதிபரின் முயற்சிகளைத் தடுத்திருந்தனர்.
12 அல்லது அதற்கு மேற்பட்ட KMT எம்பிக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால், லாயின் கட்சி நாடாளுமனற்த்தில் தற்காலிக பெரும்பான்மையைப் பெறும். ஆனால், அந்த இடங்களை யார் கைப்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தே நீண்ட காலக் கட்டுப்பாடு இருக்கும். பரவலான பதவி நீக்கங்கள் லாயின் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications