காதலியின் நடத்தையில் சந்தேகம் – உதடு, மூக்கு, காதுகளை வெட்டிய 79 வயது "தாத்தா" காதலர்!
சாங்குவா: தைவான் நாட்டில் காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது மூக்கு, காது, உதடுகளை வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் 79 வயதானவர். அவருடைய காதலி சூ கெய் 47 வயதானவர்.
சூ கெய் யோகா டீச்சராக உள்ளார். பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோகா டீச்சரான கெய்க்கு மாதம் 2 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து வந்தார்.
நடத்தையில் சந்தேகம்:
சமீப காலமாக சூ கெய்யின் நடத்தையில் சென்னுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை காதலி வீட்டில் படுக்கையில் தூங்கி கொண்டு இருந்தார்.
துண்டு, துண்டாய் வெட்டியவர்:
அப்போது சென் அவரை கட்டிப்போட்டார். பின்னர், கத்தியால் காதலியின் மூக்கு, காதுகள், உதடுகளை துண்டு துண்டாக வெட்டினார். அவற்றை கழிப்பறை கோப்பைக்குள் போட்டு மறைத்தார். பின்னர் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்தார்.
வெட்டப்பட்ட உறுப்புகள்:
காதலி சங்குவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறும் போது, "பெண்ணின் வெட்டிய உறுப்புகளை தேடிபார்த்தோம்.
முகத்தை சீரமைப்பது கடினம்:
அனைத்தும் கூர்மையான கத்தியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உள்ளது. மீண்டும் முகத்தை சீரமைப்பது மிகவும் கடினம்" என கூறினார். கைது செய்யபட்ட ஹூவாங் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications